புக்கிட் மெர்தாஜம்
ஜூன் 25
ஆர். தசரதன்
ஜூரு குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் ஜூரு தோட்டம் பகுதியில் வசிக்கும் 14 இந்திய குடும்பங்களுக்கு புக்கிட் தெங்கா சட்டமன்ற அலுவலகம் சார்பில் வீட்டுக்கு தேவையான உதவி பொருட்கள் வழங்கபட்டது.
பினாங்கு மாநில அரசங்கம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட் டமன்றதுக்கு வசதி குறைந்த மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வெ 550,000 அண்மையில் ஒதுக்கியது, அந்நிதியிலிருந்து வசதி குறைந்த ஜூரு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு புக்கிட் தெங்கா சட்டமன்ற சார்பில் பொருளுதவி வழங்கபட்டது.
பொது ஊரடுங்கு காரணமாக மக்களில் சிலர் வாழ்வாதரம் இழந்து வடுகின்றனர் அவர்களுக்கு உதவ புக்கிட் தெங்கா சட்டமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜூரு குடியிருப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்ததின் பேரில் ஜூரு கிராம நிர்வாக குழுவின் தலைவர் விக்னேஷ் ஜூரு பகுதியில் வசதி குறைந்த மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க ஏற்படுகளை செய்தார்.
உதவி பொருட்கள் வழங்கிகும் நிகழ்ச்சியில் புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கோய் ஹாசியோங் உதவியாளர் ஹூய், சுஹைய்டா ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
248 total views, 1 views today