ஆதங்கத்தில் பாடாங் செராய் மஇகா தொகுதித் தலைவர் டாக்டர் கலைகுமார் நாச்சி
பாடாங் செராய் மார்சு 8-பாடாங் செராய் மஇகா தொகுதித் தலைவர் டாக்டர் கலைகுமார் நாச்சி அவர்களின் தலைமையில், மஇகா பாடாங் செராய் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் போன்றோருடன் இணைந்து, மத போதகர் சம்ரி வினோத்திற்கு எதிராக லுனாஸ், கெடா காவல் நிலையத்தில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து டாக்டர் கலைகுமார் நாச்சி கூறியதாவது:
சமீபத்தில் மத போதகர் சம்ரி வினோத் தைப்பூசம் தொடர்பாக அவதூறாகப் பேசியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள்
இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எடுக்கப்படும் என நம்பப்படுகிறது என்றார்.

சமுதாயம் ஒன்றை மற்றொன்றுக்கு எதிராகப் புரியச் செய்யும் வகையில், தீய கருத்துகள் பரப்பப்படுகின்றன
இது போன்ற பிரச்சினைகள் நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை விசாரித்துக், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
13 total views, 1 views today