கே.ஆர் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி கால்பந்துப் போட்டியில் இராண்டாம் நிலை வெற்றியாளராக தேர்வு.
கெடா கருமு தற்காப்பு கலை சங்க தலைவர் மாஸ்டர் பிரகாஷ் பாராட்டு
சுங்கைப் பட்டாணி
ஆக 4
ஆர்.ரமணி
இளையோர் கடார காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கெடா மாநில கல்வி இலாகா மற்றும் தலைமையாசிரியர் மன்றம் இணைந்து தேசிய நில அந்த கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில் டான் ஶ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் கிண்ண காற்பந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்குகாக கே.ஆர். சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவுக்கான காற்பந்துப் போட்டியில் கே.ஆர் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலை வெற்றியாளராகத் தேர்வு பெற்றனர்.இதனுடன் கெடா மாநில மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் கே.ஆர்.சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலை வெற்றியாளராகத் தேர்வானதாக அப்பள்ளியின் பயிற்ச்சியாளர் கபினேஷ் சதீஷ் பெருமிதம் தெரிவித்தார்.
இது போன்ற வெற்றிகள் தங்களின் கால்பந்து துறை வளர்ச்சியில் மேலும் தொடரும் சூளுரைத்த கபினேஷ் சதீஷ் தங்களின் அரிமா எப்சி கால்பந்து குழுவின் மூலமாகக் கால்பந்து துறையில் மேலும் பல அனுபவங்களைப் பெறுவதுடன்,ஆர்வமுடைய இளைஞர்கள் தங்களின் அரிமா எப்சி கால்பந்து குழுவில் இணைந்துகொள்ளக் கால்பந்து பயிற்சியாளர் கபினேஷ் 014-9027754 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும்,கெடா மாநில மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் நிலை வெற்றியாளராக வாகை சூடிய கே.ஆர் சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளிக்குக் கெடா மாநில பிடோங் குருமு தற்காப்புக் கலைக் குழுவின் தலைவரான மாஸ்டர் பிரகாஷ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
39 total views, 2 views today
Good boys