English Tamil Malay

ஜாவி

பெண் செய்தியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரிடம் காவல் துறை இறுதி கட்ட விசாரணை.

பினாங்கு காவல் துறை தலைவர் டத்தோ ஹோம்சா அக்மாட் ஜாவி ஜூலை 6-பெண் செய்தியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயதுடைய ஆடவரின் இறுதிக் கட்ட விசாரணையை  முடக்கி விட்டுள்ளதாக பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ ஹாம்சா அம்மாட் தெரிவித்தார் சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த ஜூலை 3 ஆம் நாள்,பெண் செய்தியாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆடவர் ஒருவரை கைது செய்யப்பட்டு இறுதி கட்ட விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக பினாங்கு…

இந்தியர்களுக்காக மடானி அரசாங்கம் 130 மில்லியன் தொழில் கடனுதவிகளை அதிகரித்துள்ளது.டத்தோ ரமணன் 

ஜாவி ஜூலை 5-மடானி அரசாங்கத்தின் மூலமாகப்  பல வாய்ப்புகளை அரசாங்கம் வழங்கி வருகிறது,1957 ஆண்டு தொடக்கம் பல பிரதமர்களை நாம் கண்டு வந்துள்ளோம் தற்போதைய நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் மட்டுமே அனைத்து இனங்களும் இந்நாட்டில் சமூக,பொருளாதார நிலைகளில பின் தங்கிடக் கூடாது என்பதற்காகப்  பல சலுகைகளை வழங்க வருகிறார்.   அதில் நமது இந்தியச் சமுதாய மக்களுக்கு அடங்கும்.அவ்வகையில் இந்தியர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண தெக்கூன்,அமானா இக்தியார் மற்றும் எக்ரோ வங்கி ஆகியவற்றில் மூலமாகப் பல வியாபார கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதா ஜாவி கோலப் ரிசோட்டில் நடந்த இந்தியத் தொழில் முனைவர்களுக்கான சந்திப்பு கூட்டத்தில் பேசிய  கூட்டுறவு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலத்தில் இந்தியர்களுக்காகத்  தொழில் கடன் உதவி திட்டங்களுக்காக மடானி அரசாங்கம்  130 மில்லியன் மேற்கொண்ட தொழில் கடன் உதவிகளை அதகரத்துள்ளது என செய்தியாளர் சந்திப்பில் மேலும் பல விபரங்களை டத்தோ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். வழங்கப்பட்ட அந்த உதவிகளை இந்தியச் சமுதாயத்தினர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,இந்த தொழில் கடனுதவிகள் மேலும் தேவைப்பட்டாள் அதனை மேலும் அதிகரிக்கத் தக்க நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அரசு இலாக்காக்களும் வங்கிகளும் தயாராக இருக்கின்றன ஆகவே இதனை இந்தியத் தொழில் முனைவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு டத்தோ ரமணன் அறிவுறுத்தினார். 100க்கு மேற்பட்ட இந்தியத் தொழில் முனைவர்கள் கலந்துகொண்ட இந்த வியாபார தொழில் கடனுதவி விளக்கக் கூட்ட நிகழ்ச்சியில் தெக்குன் நைஷனல் தலைவர் டத்தோ அப்துல் சானி,பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன்,பினாங்கு இந்திய வர்த்தகர் தொல்லியல் சங்கத் தலைவர் டத்தோ எஸ்.பார்த்திபன்,டத்தோ பிரித்திபால் அபதுல்லா, இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.சுரேஷ், பினாங்கு ஜபிஎப் கட்சியின் தலைவர் ச .குமரேசன் உள்ளிட்ட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.  34 total views

சுங்கை பக்காப்,ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஜாவி மார்ச் 27-தென் செபராங் பிறை ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் கோலாகலமான கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 19 ஆண்டுகளாக நிர்மாணிக்கபட் சுங்கை பக்காப்,ஜாவி ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் முருகப் பெருமான் சன்னதியும் மற்ற பரிவர்த்தன…

ஜாவியில் மாமணி உணவகம் திறப்பு விழா காண்கிறது.

ஜாவி மே 25-எதிர்வரும் 29.5.2023 மதியம்12.00 மணிக்கு மாமணி உணவகம் ஜாவி பேங் ரக்யாட் வங்கி அருகில் திறப்பு விழா காண்கிறது. தனது கடின உழைப்பால் உணவு கேட்டரிங் தொழிலை ஆரம்பித்து,தற்போது பரவலாகத் திருமணம்,ஆலய திருவிழா,பிறந்த நாள்…