English Tamil Malay

Month: December 2024

பாயா பெசார் கருமாரியம்மன் ஆலயத்தில் அருணகிரிநாதர் விழா

டி.கிரிஷன் பாயா பெசார் டிச 30-லுனாஸ், டிசம்பர் 30 – கடந்த சனிக்கிழமை பாயா பெசார் கருமாரியம்மன் ஆலயமும் மலேசிய முருக பக்திப் பேரவையும் இணைந்து அருணகிரிநாதர்…

மகாகவி பாரதியார் யானை மிதிபட்டு இறந்தாரா?

மெருவாஸ் டிச 30-பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் – மேனாள் விரிவுரையாளர் தமிழ்மாறனின் உண்மை விளக்கம். மகாகவி பாரதியார் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்வதுண்டு. அக்கோயிலிலுள்ள யானைக்கு அன்றாடம்…

சிங்கப்பூரில் தொழிலதிபர் சின்னையா மற்றும் மனைவி ஜொபினா நாயுடு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

கோலாலம்பூர் டிச 29-சிங்கப்பூரில் தலைசிறந்த தொழிலதிபராக திகழும் திரு. சின்னையா நாயுடு மற்றும் அவரது மனைவி திருமதி. ஜொபினா நாயுடு, தங்களின் சமூகப் பணி, கல்வி மேம்பாட்டிற்கான…

நல்லதோர் வீணை செய்தே’ எனும் பாரதி இலக்கியத் திருவிழா

பாரதி நெஞ்சங்களே! வணக்கம் 🙏. பாரதின் 142-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 6-ஆவது ஆண்டாக, எதிர்வரும் 29.12.2024 ஞாயிற்றுக் கிழமை, கங்கை நகரம் எனும் பெருவாஸ் நகரத்தில்…

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் அருணகிரி நாதர் விழா

🦚வேலும் மயிலும் சேவலும் துணை🦚 பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் “அருணகிரிநாதர் விழா 2024”Arunagirinathar Vilaa 2024 Date : 28/12/2024 – SATURDAYTime :…

சுல்தான் இட்ரீஸ் கல்வியல் பல்கலைக்கழகம் (UPSI) மாணவர்களின் சமுகப் பணி

சுல்தான் இட்ரீஸ் கல்வியல் பல்கலைக்கழகம் (UPSI) மாணவர்களின் சமுகப் பணிதிருக்குறளை வாசிக்கும் பழக்கம் நம் மாணவர்களிடையே குறைந்து வருவதைக் கண்டறிந்த சுல்தான் இட்ரீஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு…

இந்திய விசா மையம் புதிய இடத்துக்கு மாற்றம்

கோலாலம்பூர் டிச 26- இந்திய விசா மையம் தற்போது Wisma Chase Perdanaவில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் வரும் டிசம்பர் 30 முதல் புதிய முகவரிக்கு மாற்றம்…

கோமதி விலாஸ் உணவகத்தை வெற்றிகரமாக நடத்தும் சகோதரிகள்

இந்திய இளைஞர்கள் வியாபாரத்தில் கால்பதிக்க அறிவுறுத்தல் பட்டர்வொர்த் டிசம்பர் 23-பட்டர்வொர்த் மெங்குவாங் சாலையில் கடந்த 23 ஆண்டுகளாக புஸ்பா இராமையா மற்றும் அவரது சகோதரி கோமதி இராமையா…

சென்னையிலிருந்து  பினாங்கு வந்த முதல் இன்டிகோ விமானச் சேவை!

உச்சாகமாக வரவேற்கப்பட்ட பயணிகள்! பாயான் லெப்பாஸ் டிச 22-பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.08 மணி  அளவில்  தரையிறங்கியது இன்டிகோ விமானம். 145 பயணிகளுடன் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த இன்டிகோ விமானத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர்  வோங்  ஹொன் வை,மலேசியச் சுற்றுலாத் துறை தலைமை இயக்குநர் மனோகரன் பெரிய சாமி,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்,பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன்,பினாங்கு இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்க தலைவர் டத்தோ எஸ்.பார்த்திபன்  ஆகியோர் வரவேற்றனர். பினாங்கின் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகச் சென்னையிலிருந்து பினாங்குக்கு வந்த முதல் “இன்டிகோ” நேரடி விமானத்தின் சேவை கருதப்படுகிறது என பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர்  வோங்  ஹொன் வை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த புதிய விமான வழித்தடம் பினாங்கு மற்றும் இந்தியாவிற்கிடையேயான வான்வழி இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் விரிவான மற்றும் வளர்ந்து வரும் சந்தையைத் திறக்கவும் உதவுகிறது என இந்த ஆண்டின் தொடக்கத்தில், தாம் இந்தியாவின் மும்பை, நியூ டெல்லி, சென்னை மற்றும் கொச்சின் ஆகிய நான்கு நகரங்களுக்குச் சென்று பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பல சுற்றுலா பற்றிய  விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும். இதன் பயனாகச் சென்னை பயணத்தின் போது, ​​அப்போது தமிழ்நாடு சுற்றுலா அமைச்சராக இருந்த திரு க. இராமச்சந்திரனைச் சந்தித்து, சுற்றுலாத் துறையில் கூட்டு முயற்சிகளை ஆராய்ந்ததாக வோங் மேலும் தெரிவித்தார். டெல்லியில் “இன்டிகோ” விமானச்சேவையுடன் நேரடி விமான வாய்ப்புகளை விவாதித்தேன். இன்று சென்னையிலிருந்து பினாங்குக்கு செல்லும் நேரடி விமானம் இயக்கப்படுவதால், அந்த முயற்சிகள் வெற்றியாக மாறியுள்ளன எனப் பெருமிதம் தெரிவித்தார். இத்துடன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு மீண்டும் பயணம் செய்து,  சிறப்பான முறையில் சுற்றுலா விளம்பரத்தை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர். பினாங்கு சர்வதேச தொழில் மற்றும் மாநாடுகளுக்கு முன்னோடி தலமாக உள்ளது, மேலும் நாம் மேலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் முனைப்புடன் செயல்படுகிறோம். இந்த புதிய “இன்டிகோ” நேரடி விமானம் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன், பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் நேரடி பயணத்தை வழங்குகிறது. இது சுற்றுலா, தொழில் பரிமாற்றங்கள் மற்றும் குடும்ப சந்திப்புகளில் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் தமிழகம் மற்றும் பினாங்கிற்கிடையிலான கலாச்சார உறவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தீபாவளி, தைப்பூசம் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் இரு இடங்களிலும் ஆர்வமுடன் கொண்டாடப்படுகின்றன. இது இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு பினாங்கில் பாரம்பரியமும் உறவுமுறையும் கொண்ட ஒரு சிறப்பு வாய்ந்த உணர்வுகளைக் கொண்டிருக்கும் என்றார் அவர். சென்னையிலிருந்து பினாங்கு செல்லும் இந்த புதிய விமானம், பேராக்,கெடா மற்றும் பெர்லிஸ் போன்ற வட மாநிலங்களில் உள்ள பயணிகளுக்கும் வழிவகுக்கிறது. இது பினாங்கை வலுவான விமான மையமாக மாற்றுவதில் உதவுகிறது. மேலும், இந்த நேரடி விமானம் இந்தியாவின் வளர்ந்துவரும் சுற்றுலா சந்தையிலிருந்து புதிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று நம்புவதாக அவர் விவரித்தார். இதனுடன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மலேசியச் சுற்றுலாத் துறை தலைமை அநக்குநர்  சென்னை பினாங்கு இடையிலான நேரடி விமாச சேவை நாட்டில் அதிகமான இந்திய சுற்றுப்பயணிகள் வருகைக்குச் சிறந்தவையாக அமையும் என்றும்,இந்திய சுற்றுபயணகளுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் இதுவரை இந்திய சுற்றுப்பயணிகள் 1 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளதுடன் வட மாநிலத்தில் இந்தியச் சென்னை இடையிலான விமான நேரடி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் மேலும் 205 ஆம் ஆண்டு சுற்றுலா ஆண்டாக பிரகடபடுத்துள்ளாதால் 1.4.மில்லியன் இந்திய இந்திய சுற்றுப்பயணிகள் வருகை புரிவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு மேலும் இந்திய சுற்றுப்பயணிகளுக்கு இலவச விசா கொடுக்கப்படும் என்றும் அவர் விவரித்தார். செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு…

செபராங் ஜெயாவில் தர்மம் தலைகாக்கும்.

அகல்யாசெபராங்ச ஜெயா டிச 23-சமூகவியல் சேவைகளில் 35 ஆண்டுகள் தன்னை பொது வாழ்க்கையில் இணைத்துக்கொண்ட கலைமாமணி, இலட்சிய தொண்டர், எல்.ஆர்.சிவபாலன் தலைமையில் செபராங் ஜெயா, கருமாரியம்மன் ஆலய…