English Tamil Malay

கெடா சுங்கை பட்டாணி செப் 16-மலேசிய இந்து தர்ம மாமன்றம் தேசிய இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கெடா மாநில அளவிலான இந்துதர்ம இளையோர் முகாம் கடந்த 14 – 16 செப்டம்பர் 2024 சுங்கை பட்டாணி வட்டாரத்தில் அமைந்துள்ள தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

3 நாட்கள் 2 இரவுகள் நடைபெற்ற இம்முகாமில் செயின் திரேசா, அமான் ஜெயா, சுங்கை பாசிர் , சே தோம், கூலிம் 6ஆம் படிவ கல்லூரி போன்ற சுற்றுவட்டார இடைநிலைப்பள்ளிகளிலிருந்து 63 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

இம்முகாமில் சமயக்கல்வி , தலைமைத்துவம், தேகப்பயிற்சி போன்ற முக்கிய அம்சங்களை மையமாக குழு நடவடிக்கைகள், சமய விளையாட்டுகள், யோகாசனம் உடற்பயிற்சிகள், திருமுறை பாராணம் போன்ற நடவடிக்கைகளை 20 பேர் அடங்கிய பயிற்றுநர்களும் தன்னார்வளர்களும் திறம்பட வழிநடத்தினர் என்பதை மாமன்ற தேசிய இளைஞர் பிரிவு தலைவரும் முகாமின் தலைமை பொறுப்பாளருமான ஜெகதீசன் முருகன் அவர்கள் தெரிவித்தார்.

முகாமின் தலைமை ஒருங்கினைப்பாளரான குமாரி. முகுந்தா கிருஷ்ணன் அவர்கள் இம்முகாம் நனிச்சிறந்த வகையில் நடந்தேற பல்வகையில் உதவிக்கரம் நீட்டிய முத்தையாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வாசு முத்தையா, தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி இரஞ்சிதம், கெடா மாநில சுற்றுவட்டார இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், கெடா மாநில மாமன்ற அருள்நிலைய தலைவர்கள் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், நன்கொடைகள் வழங்கிய நல்லுள்ளங்கள் அத்துனை பேருக்கும் தமது நன்றிதனைத் தெரிவித்தார்.

இம்முகாமின் வழி இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இன்றைய சவால்மிக்க உலகத்தை எதிர்நோக்க தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய அறநெறிகளையும் மதமாற்ற விழிப்புணர்வையும் விதைத்துள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதை மாமன்றத்தின் தேசிய துணை தலைவரான திரு.ஏ.கே. இரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.

 87 total views,  1 views today

One thought on “கெடா மாநில அளவிலான இந்துதர்ம இளையோர் முகாம்”
  1. I really enjoyed the camp.The camp was amazing.I hope after this have a camp like this again. I’ll try to come next camp with many people.This camp was giving me so much of benefits🙏thank you for best food, best facilitators, best everything…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *