அணிச்சல் செய்யும் துறையில் தொழில் முனைவோர் தரத்தை உறுதிப்படுத்த டத்தோ மு.இராமசந்திரன் வலியுறுத்து.
பெர்மாத்தாங் பாவ பெப் 24-பினாங்கின் மாநில சமூக அபிவிருத்தி சங்கம் (PPMNPP) மற்றும் பினாங்கு துணை முதல்வர் 2 அலுவலகம், பெர்மாத்தாங் பாவ் கியாட் மாரா தொழில் பயிற்சி கழகம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் நடத்தப்பட்ட அணிச்சல் தயாரிப்பு மற்றும் செய்முறைப் பயிலரங்கின் பங்கேற்பாளர்களுடன் கலந்துகொண்டதாக டத்தோ மு.இராமசந்திரன் தெரிவித்தார். இந்த பயிலரங்கு 23 பிப்ரவரி 2025 அன்று காலை 8.30 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பெர்மாத்தாங் பாவ் கியாட் மாரா தொழில் பயிற்சி கழகத்தில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் பங்கேற்பதற்காக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பயிலரங்கின் நோக்கம் கேக் தயாரிப்பு மற்றும் செய்முறையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு உண்மையான அனுபவத்துடன் அவற்றைச் செய்யும் முறையைப் பற்றிக் கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாகும். இதில் பங்கு பெற்றவர்கள், பினாங்கின் மாநில சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுலைமான் பின் அப்துல்லா, துணை தலைவர் கமருல் அரிபின் அப்துல் ரஷீத்,பெர்மாத்தாங் பாவ் கியாட் மாராவின் மூத்த பயிற்சியாளர் ஒஸ்மான் ஹாசன், பயிற்சியாளர் முகமட் ஹெல்மி ஜாபர் சிடிக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அணிச்சல் தந்த ரிக்கும் தயாரிப்புகளின் தரத்தை உறுதிப்படுத்துமாறு டத்தோ மு. இராமசந்திரன் அறிவுறுத்தியதுடன். மேலும், தொழில்துறையின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பின்தொடர்ந்து மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் டத்தோ இராமசந்திரன் கேட்டுக்கொண்டார் அவர்களுடைய திறமை, அனுபவம் மற்றும் உறுதிச் சிந்தனை மூலமாக, இன்னும் பல வெற்றிகரமான அணிச்சல் தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும், மேலும் உணவுத் தொழில்துறையை மேலும் நேர்த்தியான மற்றும் போட்டியால் நிரம்பியதாக்க உதவ முடியும் என்பதில் தாம் நம்பிக்கை கொள்வதாக டத்தோ மு.இராமசந்திரன் தெரிவித்தார். 21 total views