ஜோர்ஜ்டவுன் ஜன 10-பினாங்கு மாநில அரச மலேசியக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய வரும் காவல் துறைக்கு அதிகாரிகளுக்கு நேற்று பினாங்கு காவல் துறை தலைமையகத்தில் உள்ள முத்தியார மண்டபத்தில், மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹாம்சா ஹஜி அக்மாட் தலைமையில் நடத்தப்பட்ட 2025 ஆண்டுக்கான ஜனவரி மாத பேரணியில் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து ஏஎஸ்பி பதவி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு கெளரவிக்கபட்டனர் அவர்களில் நான்கு இந்தியக் காவல் அதிகாரிகளும் அடங்குவர்.அரச மலேசியக் காவல் படையில் கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவையாற்றி வரும் ஏஎஸ்பி லோகநாதன் கிருஷ்ணன்,25 ஆண்டுகளாகத் திறன் மிக்க சேவையை ஆற்றிவரும் ஏஎஸ்பி யோகிஸ்வரன் கணேசன், 14 ஆண்டுகளாக சீரிய முறையில் காவல் துறைக்கு நற்பங்களிப்பை வழங்கி வரும் ஏஎஸ்பி காளிதாசன் வீ. இராஜ குமார்,14 ஆண்டுக்காலமாக ஆற்றல் மிகுந்த சேவைதனை ஆற்றி வரும் ஏஎஸ்பி கோபிநாத் கோவிந்தன் ஆகியோர் ஏஸ்பி பதவிக்கு உயர்வு பெற்ற இந்தியக் காவல் அதிகாரிகள் ஆவர். பதவி உயர்வுப் பெற்ற அதிகாரிகளுக்குபினாங்கு மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஹாம்சா ஹஜி அக்மாட் பாராட்டு பத்திரமும் நற்சான்றிதலும் வழங்கி கௌரவித்தார். 26 total views