English Tamil Malay

பெருவாஸ் மார்ச்சு 8- பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி எச்சரிக்கை

நாட்டில் இந்தியர்களையும் இந்து சமயத்தையும், இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே அவற்றையெல்லாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்!

மஞ்ஜோங் மாவட்ட காவல் நிலையத்தில் (IPD) யில் ஆலய பிரதிநிதிகள், அரசு சாரா இயக்கம், இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் இந்து சபா உள்ளிட்ட 20 முக்கிய பொது அமைப்புகள் மத நல்லிணக்கத்திற்காக இந்து சமயத்தை தொடர்ந்து இழிவு படுத்திகொண்டிருக்கின்ற மத போதகர் சம்ரி வினோத் அவர்களின் மீது போலீஸ்புகார் அளித்துள்ளனர்.

நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் மத போதகர் சம்ரி வினோத் திகழ்வதால் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளதாக திரு தினகரன் கோவிந்தசாமி கூறினார்.

ஒற்றுமை மலேசியாவாக திகழும் நம் நாட்டில் அவரவர் சமய வழிபாட்டிற்கு முழு உரிமை இருந்தும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் எனும் கோட்பாட்டினை மறந்து எல்லை மீறி மத போதகர் சம்ரி வினோத் அவர்கள் நடந்து கொண்டுள்ளார் என அவர் மேலும் தமது ஆதங்த்தினைத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் அவரின் கூற்று அமைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசிய மக்களின் ஒற்றுமை தொடர்ந்து நிலைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்புகார் அளிக்கப்பட்டது என பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில்
முஸ்லிம் நண்பர்கள்
புனித ரமலான் நோன்பு மாதத்தில் நோன்பு இருந்து புனித காரியங்களை செய்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், சம்ரி வினோத் என்பவர் இந்துக்களையும் இந்து சமயத்தையும் இழிவாக பேசிக் கொண்டிருப்பது, நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இந்தியர்களை அவ மதிக்கக் கூடிய ஒரு செயலாகும்.

நாட்டில் உள்ள இந்துக்கள் அனைத்து சமயத்திற்கும் மதிப்பளிக்கக் கூடியவர்கள். நாட்டில் இறையாண்மையும் மத நல்லிணக்கமும் பேணிக்காப்பதில், மடானி அரசு தொடர வேண்டுமானால், நாட்டிலுள்ள இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அரசாங்கம் இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 26 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *