English Tamil Malay

தாசேக் கெளுகோர்

மேபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு சாதணை விழா!

பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றார்களின் பங்கு அவசியம்:டத்தோ க.புலவேந்திரன்  ஜன 14 தாசேக் கெளுகோர் தமிழ்ப்பள்ளி பயிலும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கேள்விகளில் மட்டும் அல்லாத,கலை கலாச்சாரம் மொழி ஆளுமை,புறப்பாட  ஆகியவற்றில் சிறந்து விளங்கி வருகின்றனர் என தேசிய வகை மேப்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த 2024/25 பட்டமளிப்பு மற்றும் சாதனை விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவரான டத்தோ ஶ்ரீ க.புலவேந்திரன் தெரிவித்தார். பிள்ளைகளை கவனிப்பது பெற்றோர்களின் மிகப் பெரிய பொருப்பு என்றும், அவர்களின் நடவடிக்கையை இளம் பருவத்திலிருந்தே சிறந்த கல்வி,நல்லொழுக்கம் சமய கல்வி கற்க உதவிட பெரும் பொருப்பு பெற்றோர்களுக்கு உள்ளது என மேலும் அவர் தெரிவித்தார். இளைஞர்கள் தங்களின் பொன்னான வாழ்வை கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு விட்டு விட்டால் அது மகப் பெரிய அவலத்தை நமது சமூகத்தில் ஏற்படுத்தி விடும்,குற்றத் தடுப்பு அறவாரியத்தில் தாம் உள்ளதால் சிறைச் சாலைக்கு செல்லும் வேளையில், சிறையில் உள்ள இளைஞர்களை  விசாரிக்கம் போது அவர்கள் அவர்களின் குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால்,தீய நண்பர்களின் சேர்கையால் குற்றச் செயலில் ஈடுபடக்காரணமாக அமைந்துள்ளதை தம்மிடம் தெரிவித்தனர்,ஆகவே பெற்றார்கள் செய்யும் தவற்றால் பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கபடுகிறது என்றார் அவர். பள்ளி பாடத்தில் சிறந்த  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும்,விருதுகளை வென்ற மாணவர்களுக்கும் தமது பாராட்டை தெரிவித்துக்கொண்ட டத்தோ ஶ்ரீ க.புலவேந்தரன் இடைநிலைப் பள்ளியில் முதல் படிவத்தில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள்  மன உறுதியுடன் இதற மற்ற இன மாணவர்களுக்கு ஈடாக தங்களின் திறமையும், ஆற்றலையும் வெளிபடுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன்,பள்ளி தலைமையாசிரியர் கவிதா பெருமாள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள பட்டமளிப்பு விழாவுக்கான உடை மாணவர்களை எதிர்காலத்தில் ஒரு பட்டதாரியாக உறுவாக ஒரு உத்துதலை ஏறப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும சாதணை விழா நடத்திட பெரும் ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் கவிதா பெருமாள் நன்றி பாராட்டியதுடன்,இவ்விழா மாணவர்களின் முயற்ச்சியையும் சதணையும் அங்கிகரிக்கும் ஒரு  விழாவாக அமைவதுடன் மேலும் மாணவர்கள் தங்களின் சாதணையை ஊக்குவிப்பதுடன் மாணவர்கள் கல்வி கேள்விகளிலும் ஒழுக்கத்திலும் சிறப்பாக அமைய வழிவகுக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். குற்றத்தடுப்பு அறவாரியத்தின் வட மாவட்ட தலைவர் இராஜாமுனு இந்நிகழ்ச்சியில் உடன் கலந்துக்கொண்டு…

மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி

தாசேக் கெளுகோர் செ 29-மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2024ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டி மிகக் கோலாகலமாக கடந்த 28.09.2024  காலை 8.00 மணியளவில் பள்ளித் திடலில் சிறப்பாக…