புக்கிட் மெர்தாஜம்
ஜூன் 29
ஆர். தசரதன்
பினாங்கு மாநில காவல் துறை அதிகாரிகள் டி9 குற்ற ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மாச்சாங் பூபோக்,புக்கிட் தெங்கா போன்ற பகுதிகளில் வெ 8.7 மில்லியன் மதிப்புள்ள 691,200 சிகிரெட் பேக்கெட் கொண்ட கடத்தல் சிகிரெட் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை முறியடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் 18 முதல் 38 வயதுடைய 12 ஆடவர்களைக் கைது செய்துள்ளதுடன்,கைதானவர்கள் அனைவரும் போதைப்பொருள்,சூதாட்டம் மற்றும் சுங்கத் துறைக்கு மீறிய கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று,காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ சஹாபுதீன் மானான் கூறினார்.

காவல் துறை விசாரணையில் மேலும் கடத்தப்பட்ட அணைத்து சிகெரெட்களும் அண்டை நாடுகளிலிருந்து கடத்தப்பட்டவை என அறியப்படுவதாகவும்,இதன் தொடர்பில் மேல் விசாரனை நடத்தப்படும் என்று டத்தோ சஹாபூதின் கூறினார்.கடத்தப்பட்ட சிகிரெட்கள் அனைத்தும் மலேசிய வட மாநிலப் பகுதிகளில் விநியோகம் செய்யக்கூடியதாக இருக்குமென நம்பப்படுவதாக செபராங் பிறை,மத்திய மாவட்ட காவல் நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோ சஹாபுதீன் மானான் விவரித்தார்.
இதனுடன் கடத்தல் கும்பலிடமிருந்து வெ 236,000 மதிப்புடைய வாகனங்களுடன் 8.7 மில்லியன் கடத்தல் சிகிரெட்களை மதிப்புடைய காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
272 total views, 1 views today