தி. கிரிஷன்
கடந்த 31/7/2024 புதன்கிழமை, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் தமிழ்ச் சான்றோர் சிலை திறப்பு விழா காலை 8 மணிக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகையாளர்களாக பினாங்கு ஆசிரியர் கல்விக் கழக மேனாள் விரிவுரையாளரும், பாரதி இலக்கிய நெஞ்சங்கள் இயக்கத்தின் தோற்றுநருமான உயர்திரு தமிழ்மாறன் பலராம் அவர்களும், பாரதி இலக்கிய நெஞ்சங்கள் இயக்கத்தின் தலைவரும் மேனாள் தலைமையாசிரியருமான திரு.மு.முனுசாமி அவர்களும் வருகையளித்தனர்.
மேலும் இவ்விழாவைச் சிறப்பிக்க பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ இரா.அருணாசலம் அவர்களும், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு. ஆ.அசோக் , மேலாளர் வாரியக் குழுத் துணைத்தலைவர் திரு. சண்முகநாதன் அவர்களும், கவிஞர் திரு. ஜெயபாலன் ராமசாமி அவர்களும், பினாங்கு மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் மேனாள் உதவி இயக்குநர் குமாரி சகுந்தலா ஆரோக்கியம் அவர்களும், மேனாள் தலைமையாசிரியர் டத்தோ பெருமாள் அவர்களும், மேனாள் தலைமையாசிரியர் திரு. கரு. இராஜமாணிக்கம் அவர்களும், மேனாள் தலைமையாசிரியர் திரு. ந. விஜயகுமார் அவர்களும், மேபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி கோமதி அவர்களும், பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி கோகிலாவாணி ,ஜூரு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் அ.இராஜராஜன், பழனியாண்டி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி வசந்தி, முன்னாள் தலைமையாசிரியர் திரு. இரா. யோகேஸ்வரன் , துணைத்தலைமையாசிரியர் திரு. தியாகராஜன் அவர்களும், பள்ளி முன்னாள் மாணவ இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. ந. சந்திரகாந், கல்விச் சாதனை நிலையப் பொறுப்பாளர் திரு. செல்வராஜூ அவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் செயலவை உறுப்பினர்களும் திரளாக வருகை புரிந்து இவ்விழாவைச் சிறப்பித்தனர்.
பாரதி, வள்ளுவர், ஔவையார் மூவர் சிலை திறப்பு விழா இப்பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. வருகைபுரிந்த சிறப்பு வருகையாளர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து ஔவையார், வள்ளுவர், பாரதி ஆகியோரின் திருவுருவச் சிலைகளின் திருவடிகளில் மலரிதழ்களை அன்புடனும் மகிழ்வுடனும் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஆணிவேராக விளங்கிய நன்னெஞ்சங்களை என்றும் மறக்கவியலாது. திருவள்ளுவர் சிலைக்கு நன்கொடை வழங்கிய பாலாஜி கட்டுமானத் துறையினர்க்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர் திரு. உதயசூரியன் அவர்களுக்கும், பாரதியார் சிலைக்கு நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் சங்கத்தின் மேனாள் தலைவர் திரு வி.சி. கணேசன் அவர்களுக்கும், ஔவையார் சிலைக்கு நன்கொடை வழங்கிய ஆறுமுகம் நடனப் பயிற்சி மையத் தோற்றுநர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கும், குறிப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. புவனேஸ்வரன் தங்கவேலு அவர்களும் ஆலவிழுதாய் அணைத்து நின்ற அத்துணை அன்புள்ளங்களுக்கும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் தமது நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை மாலைகளாகச் சூட்டுவதில் பெருமை கொள்கின்றனர்.
46 total views, 1 views today
very nice and the students are looking stunning sir please continue all this things