English Tamil Malay

கோலாலம்பூர் செப் 13-
கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் 35 ஆவது குறுக்கோட்ட போட்டியில் சுமார் 1,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.
தலைநகர் மெர்போக் திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செப் 11 ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் மற்றும் ஸ்போர்ட்ஸ் டோட்டோ நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு தலைமை நிர்வாகி துங் கை சேக் இந்த போட்டியில் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.


இந்த போட்டி 10 பிரிவுகளாக நடைபெற்றது.
ஸ்போர்ட்ஸ் டோட்டோ ஆதரவில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றியாளர்களுக்கு டத்தோஸ்ரீ புலேந்திரன் மற்றும் ஸ்போர்ட்ஸ் டோட்டோ அதிகாரிகளான மாயா காவ்ர்,கியாம் சை கூன்,நஹாரியா அப்துல் ரசாக் பரிசுகளை வழங்கினர்.
15 கிலோமீட்டர் ஓட்ட போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கும், 7 கிலோமீட்டர் ஓட்ட போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கும் மற்றும் 3 கிலோமீட்டர் போட்டியில் முதல் 5 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


இந்த போட்டியை வெற்றியடையச் செய்ய முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஸ்போர்ட்ஸ் டோட்டோ, அரச மலேசிய போலீஸ் படை, கோலாலம்பூர் மாநகர் மன்றம் மற்றும் தொண்டூழியர்களுக்கும் டத்தோஸ்ரீ புலேந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 556 total views,  1 views today

One thought on “35 ஆவது குறுக்கோட்ட போட்டியில் 1,000 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *