English Tamil Malay

தந்தையோ சிறைச்சாலையில்…..

மஞ்சோங் மார்ச் 7-அதிர்ச்சியில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஷாலினி எனும் 13 வயது சிறுமி முன் பின் தெரியாத ஒருவரின் வீட்டில் 4 வயதாக இருக்கும் போது விட்டுச் செல்லப்பட்டார்.

அக்குடும்பத்தின் பாதுகாப்பில் 5,6 மாத்காலத்தில் தங்கியிருந்த நிலாஷினி பிறகு மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள இந்து சபா சனாதன ஆசிரமத்தில் இன்று வரை வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் இன்று வளர்ந்து அடையாள ஆவணம், பிறப்பு பத்திரம் போன்றவையின்றி இருப்பது கவலைக்குறியதாக விளங்குகிறது.

சுமார் 12 ஆண்டுகாலமாக ஆசிரமத்தில் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டாலும் கூட பிறப்பு பத்திரம், அடையாள ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு இடைநிலைப்பள்ளியில் தமது கல்வியைத் தொடர நிஷாலினி ஆர்வம் கொண்ட போதிலும் தகுந்த பிறப்பு பத்திரம் இல்லாத நிலையில் அவரின் கல்வி வாழ்க்கை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தமது தந்தையின் பெயர் குமார் என்றும் தாயாரின் பெயர் ரம்பாவதி என்றும் தாம் நினைவில் வைத்துள்ளதாக அண்மையில் வெளியிட்ட காணொலி ஒன்றில் நிஷாலினி இவ்வாரு கூறியுள்ளார்.

இது நாள் வரை எங்கு இருக்கின்றார் என்ற தகவல் தெரியாத சம்பந்தப்பட்ட குமார் என்பவர் தற்பொழுது தைப்பிங் கமுண்டிங் சிறைச்சாலையில் ஒரு சில குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதனை அறிந்த பெருவாஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய
நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி நேரில் சம்பந்தப்பட்ட நிஷாலினியின் தந்தையான குமாரை சிறைச்சாலையில் சென்று சந்தித்தார்.

நிஷாலினியின் ,பிறப்பு பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து பேசப்பட்டதாக, மேலும் அவரின் மனைவி ரம்பாவதி தற்பொழுது எங்கு இருக்கின்றார் என்ற முழுமையான தகவலை வழங்க முடியாத ஒரு சில காரணங்களினால்,
இன்று நடைபெற்ற நேர்முக பேச்சுவார்த்தை, தமக்கு மன நிறைவு அளிக்கவில்லை என்றும்
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட தாயார் ரம்பாவதி ஒரு முக்கிய பிரதிவாதியாக, நிஷாலினியின் பிறப்பு பத்திரம் அடையாள
ஆவணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தற்பொழுது கணவர் வழங்கிய வாக்குமூலம் தொடர்பாக, கடந்த காலங்களில் ரம்பாவதி த/பெ உபி மணியம்
என்று அடையாளப்படுத்திய,
Ladang sungai Bertang karak எனும் தோட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும், வாக்குமூலம் மட்டுமே வழங்கப்பட்டதாக தினகரன் கூறினார்.

மேலும் இது குறித்து
நிஷாலினி 31 ஆகஸ்ட் மாதம் 2012 கேமரன் மலை, மருத்துவமனையில் பிறந்ததாகவும் அவர் கூறினார். தற்பொழுது நிஷாலினியின் தாயார் ரம்பாவதியைத் தேடும் நடவடிக்கையில், தாம் தீவிரமாக, இறங்கியுள்ளதாகவும், தகவல் அறிந்த பொதுமக்கள், தம்மையோ தற்பொழுது நிஷாலினி தங்கியுள்ள மஞ்சோங் இந்து சபா சனாதன ஆசிரமத்தின் தோற்றுநர் ஐயா ஏரம்பன் அவர்களையும்
அல்லது அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்!

மேலும் இச்சம்பவம் குறித்து கேமரன் மலை அரசு மருத்துவமனைக்கு, உரிய ஆவணங்களை தேடி தாம் செல்ல இருப்பதாக கூறினார் தினகரன்.

 36 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *