புக்கிட் மெர்தாஜாம் ஜன 25-செபராங் பிறை மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன் வராஹி ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு பினாங்கு மாநில இந்து சபா துணை தலைவரும்,பினாங்கு இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்கத்தின் உதவி தலைவரான டத்தோ மரியதாஸ் கோபால் டத்தின் ஜெ.ஜெ.ஜெயா ஊய் குடும்பத்தினரின் சார்பில் சிறப்பு உபயம் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.

ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன் வராஹி ஆலயத்தின் சிறபமாக அமைக்கபட்டுள்ள வராஹி அம்மனின் திருவிழாவை முன்னிட்டு உபயங்கள் நடத்தப்பட்டு வருகிறது, மேலும் அடுத்த பிப்பிரவரி மாதத்தில் வாராஹி அம்மனின் திருவிழா கோலாகலமாக நடத்தபடும் என புக்கிட் மெர்த்தாஜம்,இராயில்வே ஸ்ரீ முனீஸ்வரர், சிவன் வாராஹி ஆலயத்தின் தலைவரான டத்தோ து.தேவேந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தின் எந்த சுற்று வட்டாரத்தில். இல்லாத அலவில் 6 அடி உயத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ள வராஹி அம்மனின் தரிசனம் பெற பக்தர்கள் எல்லாவிதமான விழாக்களிளும் குறிப்பாக வராஹி உச்சவ உபயம் மற்றும் திருவிழாவில் மக்கள் பெருமளவில் கூடுவர் என ஆலய தலைவரான டத்தோ தேவேந்திரன் விவரித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடத்தபட்ட ஆலயத்தில் டத்தோ மரியதாஸ் குடும்பத்தினர் கலந்துகொண்டதுடன் வராஹி அம்மனின் சிறப்பு பிராத்தனை மற்றும் பல்லாக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ முனீஸ்வரர்,சிவன் வராஹி ஆலயத்தின் தலைவரான டத்தோ தேவேந்திரன் சார்பில் உபயத்தை ஏற்று நடத்திய டத்தோ மரியதாஸ் கோபால் டத்தின் ஊய் தம்பதிகளுக்கு பொன்னாடை மற்றும் மலை அனிவித்து கொரவித்ததுடன் உடன் கலந்துக்கொண்ட டத்தோ மு.இராமசந்திரன் மற்று இதர பிரமுகர்களுக்கும் கெளரவிக்கப்படனர் என்பது குறிப்பிடதக்கது.
24 total views, 2 views today