கடந்த 2023 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 9 ஏ பெற்று தம்புன் இடைநிலைப் பள்ளியின் சிறந்த மாணவியாக பிராசேதா தேவி த/பெ தேர்வு பெற்றார்.
கடந்த வாரம் நடைபெற்ற தம்புன் இடைநிலைப் பள்ளியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிராசேதா தேவி கௌரவிக்கப்பட்டார்.
எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியை பெற்றதுக்கு தமது தாயார் விஜய் லதா முக்கிய பங்காற்றியதாக பிராசேதா கூறினார்.

தமது மூன்றரை வயதின் போது தமது தாயார் பரதநாட்டிய கலையை கற்றுத் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.அதன் பின் 7 வயதில் யோகா கலையை தமது தாயார் கற்றுத் தந்ததாக அவர் சொன்னார்.தமது தாயார் விஜயலதா ஒரு சிறந்த யோகா பயிற்சியாளர் என்று கூறிக் கொள்வதில் தாம் பெருமை அடைவதாக அவர் சொன்னார்.
தமது லட்சியம் ஒரு சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்பதே என்றார் அவர்.
136 total views, 2 views today
மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள்…
வாழ்க வளமுடன்…