English Tamil Malay

கோலாலம்பூர்

மலேசிய ஐபிஎப் தலைமையகம் மற்றும் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் இரங்கல் செய்தி

கோலாலம்பூர் ஜன 21-மலேசிய ஐபிஎப் தலைமையகம் மற்றும் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் சார்பில், மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவரும், சமூக சேவகரும், கலை மற்றும்…

இந்து சங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவிலாயா மாநிலத்திற்கான புதிய அமைச்சர்கூறுவதா? இந்து சங்கம் அதிருப்தி!

10 ஜனவரி 2025 –ஆலயங்களில் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்அதிகாரம் மலேசிய இந்து சங்கத்திற்கு இல்லை எனபிரதமத்துறையில் கூட்டரசு பிரதேசத்திற்கான (விலாயா)அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் ஸாலிஹா பிந்திமுஸ்தாபா கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது குறித்துமலேசிய இந்து சங்கம் தனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் இந்து சமயம் மற்றும்ஆலயங்கள் சார்ந்த விவகாரங்களுக்குத் தீர்வுக் காணமலேசிய இந்து சங்கம் மேற்கொண்ட அரும் முயற்சிகள்யாவும் வெள்ளிடை மலை. இன்று நாட்டில் இந்துஆலயங்கள் தங்கள் வழிப்பாடுகளையும் நிர்வாகத்தையும்சிக்கலின்றி வழிநடத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைஇந்து சங்கம் மேற்கொண்டது ஊர் அறியும். ஆனால், புதிதாக பணிக்கு வரும் சிலர் ‘தாங்கள் தான்எல்லாம், மற்றவர்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றதோரணையில் நடந்து கொள்வது வழக்கமாகி விட்டது. இந்த மனப்போக்கினால் விளைந்த சிக்கல்கள், பிரச்சனைகள் ஏராளம், அது இன்றும் தொடர்வது அதிருப்திஅளிக்கிறது என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன்தெரிவித்தார்.  இவ்வாறு நடப்பது புதியது அன்று. அமைச்சரோ, அரசுஇலாகாக்களின் தலைவரோ, அல்லது ஆலயத்திற்குதலைவரோ யாரேனும் புதிதாக பணிக்குப் பொறுப்பேற்றால்அவர்களின் பெரும்பாலான பேச்சுப் பொருள் இந்துசங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்பது தான். புதியவர்களுக்கு தன்னால் மட்டுமே அல்லது தன்னைமுன்னிருத்தியே அனைத்து நடக்கவேண்டும் என்ற எண்ணம்உருவாகுவது இயல்பு தான். ஆனால் நிதர்சன உண்மைஎன்பது வேறு. சட்ட ரீதியில் இந்து சங்கத்திற்கு ஆணையிடும் அதிகாரம்இல்லை தான். ஆனால், தார்மீக அடிப்படையில் நாட்டில்இந்து சமயம் நிலைத்து நிற்க முன் நின்று அரணாகவிளங்குவது இந்து சங்கம் மட்டுமே. அதற்கான முழுஅங்கீகாரத்தையும் மலேசிய அரசாங்கம் மலேசிய இந்துசங்கத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஆலயங்கள்இந்து சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில்வழிப்பாடுகளையும் நிர்வாகத்தையும் நடத்தி வருகின்றன. இதற்கு உறுதுணையான அங்கீகரிக்கப்பட்ட ஆலயக்கையேடு எனும் புத்தகம் பயன்பாட்டில் இருக்கிறது. பிரச்சனை உள்ள ஆலயங்கள் பற்றி பொதுவெளியில்தெரியும். அவற்றில் பல ஆலயங்கள் இந்து சங்கத்தின்தொடக்க ஆலோசனைகளை ஏற்காமல்செயல்பட்டவையாக இருக்கும். விவகாரம்பூதாக்கரமானதாக மாறிய பிறகு இந்து சங்கம் மீதே மீண்டும்பழி சுமத்தப்படுவது தொடர்கதை.  ஆனால், இந்து சங்கத்தால் ஆரம்பக்கட்டத்திலேயேவிவகாரங்களைப் பேசி தீர்வுக் காணப்பட்ட ஆலயங்கள்ஏராளம். அதைப் பற்றி பெருமைப்படுவோர் யாரும் இல்லை; இந்து சங்கமும் அதை எதிர்ப்பார்ப்பதில்லை.  இவ்வளவு இருக்க, இதுகாறும் சமய மற்றும் ஆலயவிவகாரங்களில் பரந்த அனுபவத்தோடு, துண்ணியபார்வையோடு கையாண்டு தீர்வு கண்டு வரும் இந்துசங்கத்தை மேம்போக்காக ‘அதிகாரம் இல்லாத இயக்கம்’ என மிக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டியஅமைச்சரே பேசியிருப்பது வருத்தத்குரியது. இங்குபிரச்சனைகள் தீர்க்கப்பட்ட வேண்டுமே தவிர அதனைவைத்து குளிர்க் காயக்கூடாது என்பதை அனைத்துதரப்பினரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் எனஇந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.  என்றும் இறைச் சேவையில், ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்  16 total views

இந்திய அரசாங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் பரவாசி எக்ஸ்பிரஸ் பயணத்தில் ப.தா. மகாலிங்கம் பங்கேற்பு

கோலாலம்பூர், ஜனவரி 8 – இந்திய அரசாங்கம், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள இந்தியர்களை “பரவாசி பாரத்” இரயில் மூலம் பல சுற்றுலா தளங்களுக்கும் புகழ்பெற்ற ஆலயங்களுக்கும், முக்கியமான…

இந்திய சமுதாய சிக்கல்

வட்ட மேசைக் கூட்டத்திற்கு பொது அமைப்புகளும் அழைக்கப்பட வேண்டும் –இந்து சங்கம் அகல்யாபெட்டாலிங் ஜெயா, ஜனவரி .02-மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கவும் பொருத்தமான…

சிங்கப்பூரில் தொழிலதிபர் சின்னையா மற்றும் மனைவி ஜொபினா நாயுடு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

கோலாலம்பூர் டிச 29-சிங்கப்பூரில் தலைசிறந்த தொழிலதிபராக திகழும் திரு. சின்னையா நாயுடு மற்றும் அவரது மனைவி திருமதி. ஜொபினா நாயுடு, தங்களின் சமூகப் பணி, கல்வி மேம்பாட்டிற்கான…

இந்திய விசா மையம் புதிய இடத்துக்கு மாற்றம்

கோலாலம்பூர் டிச 26- இந்திய விசா மையம் தற்போது Wisma Chase Perdanaவில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் வரும் டிசம்பர் 30 முதல் புதிய முகவரிக்கு மாற்றம்…

2025 ஆம் ஆண்டில் ஐந்து புத்தகங்கள் இலக்கு.

தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் வெளியிடும் நீண்டகால கனவுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கோலாலம்பூர் டிச. 23-மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மலாயில் மொழிப்பெயர்ப்பு செய்து அதனை…

எழுத்தாளர் பாவை பெற்ற விருது மலேசியத் தேசிய ஆவணக்கப்பத்தில் அங்கீகாரம்

கோலாலம்பூர். டிச. 14-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் திருமதி பாவை அவர்களுக்கு வழங்கப்பட்ட மலேசியச் சாதனைப் புத்தக விருதின் டிஜிட்டல் நகல் மலேசியத் தேசிய…

“சிறையிலிருந்து உயர்ந்த கல்வி நிலைக்கு: முராட் இரண்டாவது வாய்ப்பின் கொணடு நிரூபித்தார்”

கோலாலம்பூர் டிச 12-முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தனது வாழ்க்கையை மாற்றியமைத்து, வணிக மேலாண்மை துறையில் பிஎச்டி (PhD) பட்டம் பெற்று சாதனை படைத்த முராட்…

தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனை திறன் புதிர்ப்போட்டி 2024.

அகல்யாகோலாலம்பூர், டிச.11 –இன்றைய நிலையில், மாணவர்கள் பயிலும் அனைத்துப் பாடங்களிலும் உயர்நிலைச் சிந்தனைத் திறன் முக்கிய கற்றல் கற்பித்தல் கூறுகளில் ஒன்றாக இடம்பெற்று வருவதை நாம் அறிவோம்.…