வாக்கு கேட்டு மக்களைத் தேடி செல்கிறேன்,இறுதி முடிவு வாக்கு பெட்டியில்.தான் ஹூம் வேய்
மாச்சாங் பூபோக் ஆக 9-பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் மாச்சாங் பூபோக் சட்டமன்ற வேட்பாளர் தான் ஹூம் வேய் தமது வெற்றியைச் சீன வாக்காளர் நிர்ணயிப்பது இல்லை என அவரை மாச்சாங் பூபோக் பெரிக்காத்தான் நெஷனல் அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார். மாச்சாங் பூபோக் சட்டமன்றத் தொகுதியில் 56,000 இந்திய மலாய்கார்கள் கூட உள்ளனர் அவர்களும் தமக்கு வெற்றியைத் தரப் பங்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மலாய்,இந்திய வாக்காளர்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்பது உத்தரவாதமில்லை என்றும்,மாறாகச் சீன வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தால் மகிழ்ச்சியாகும் என்றார் அவர். வாக்குகளைப் பெறுவது சாமானிய காரியமில்லை,கரணம் பாக்காத்தான் ஹாராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரண்டாவது முறையாக இந்த சட்டமன்றத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார். தாம் சூழ்நிலை கருதி நிற்கின்ற வேட்பாளர் என்பதுடன்,தமது அடையாளம் தாம் பிராப்பிட் பகுதியில் உள்ள மண்ணின் என்பதே ஆகும் என அலை ஒளி நேர்காணலில் அவர் கூறினார். தமது தேர்தல் பரப்புரைக்குக் கட்சி சார்பில் பெரும் பணம் வழங்கப்படவில்லை,அனைத்து செலவினங்களும் தாமே பார்த்துக்கொள்வதுடன்,சிறிய ஆள் பலத்துடன் மக்களைச் சந்தித்து வருவதாக விவரித்தார். மக்களைத் தேர்தல் அறிக்கை மூலமாக நேரடியாகச் சென்று வாக்கு கேட்டு வருகிறேன் என்பதுடன் அதனை மாச்சாங் பூபோக் சட்டமன்ற பகுதியில் தினம் தோறும் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 30-70 முறையில் தமது எதிர்பார்ப்பைக் கொண்டு தொடர்ந்து வாக்காளர்களின் நம்பிக்கையைக் கவர இறுதி வரை போராடுவேன் என்பதுடன் ஆகஸ்ட் 12 வரை மக்களின் தீர்ப்பினை வரவேற்பேன் என்றும் அவர் தெரிவித்தார். 170 total views