கப்பளா பத்தாஸ் மே 6-மறைந்த பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் முன்னாள் இளைஞர்பகுதி தலைவரும்,ஐபிஎப் கட்சியின் விசுவாசமான தொண்டருமான ஏ.வில்வமங்களம் நல்லுடலுக்குப் பினாங்கு ஐபிஎப் தலைவர் எஸ்.குமரேசன் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனுடன் இறுதி அஞ்சலி செலுத்தியதில் உடன் ஐபிஎப் தேசிய துணை தலைவர் டத்தோ கே.வேலாயுதம்,பினாங்கு ஐபிஎப் கட்சயின் பொருளாலர் வீ.சந்திரசேகரன் மற்றும் ஐபிஎப் கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் ஏ.தினகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பினாங்கு மாநில ஐபிஎப் மற்றும் ஐபிஎம் தேசிய அளவிலான் அனைத்துச் செயல்பாடுகளுக்குச் சிறந்த சேவையாற்றிய ஏ.வில்வமங்களத்தின் இழப்பு பெரிழப்பகும் எனத் தமது இரங்கல் செய்தியில் எஸ்.குமரேசன் குறிப்பிட்டார். 237 total views