ஆர்.தசரதன்
கோலாலம்பூர் மே26-நாட்டின் நன்கு அறியப்பட்ட கலைஞர் திரு. ராமசுந்தரம் என்கிற ராமா 26 மே 2021 அன்று அதிகாலை கோலாலம்பூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
நடிகர், இயக்குநர், பாடகர், சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்ட ராமாவின் இறப்பு கலைதுறைக்கு பேர் இழப்பாகும். மலேசிய தமிழ் கலைத்துறையில் மட்டுமல்லாமல் மலாய் மற்றும் மலேசிய சீனப் படங்கள், நாடகங்களின் மூலம் நமது நாட்டில் அனைத்து மக்களிடமும் நன்கு அறியப்பட்டவர் ராமா. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாட்டு படங்களிலும் ராமா நடித்துள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
269 total views, 1 views today