பட்டர்வொர்த் ஜூலை 13 11 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பணச் சலவை குற்றத்திற்காக பினாங்கு பாயான் பாரு அம்னோ தொகுதி தலைவர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 11 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ரொக்கம், பங்கு சந்தை மற்றும் சொத்துக்களை அன்பளிப்பாக பெற்றதாக பத்து மாவுங்கை சேர்ந்த அம்னோ தொகுதி தலைவர் மன்சோர் மூசா விற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 2011 செப்டம்பர் மற்றும் 20 20 ஆகஸ்ட் பத்தாம் தேதிக்கு இடையே மன்சோர் இந்த குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
கடந்த 2004 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மன்சோருக்கு எதிராக 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூடுதல் பட்சம் 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
168 total views, 1 views today