பினாங்கு ஜூலை 12-பினாங்கு மாநில துணைத் தலைவர் ச.குமரேசன் மற்றும் திரிகேஷ பூலோரிஸ்ட்ஸ் (பூக்கடை)பாண்டார் தாசெக் முதியரா சிம்பாங் அம்பாட், உரிமையாளர் திரு அ.சிவம் இணைந்து பத்து காவன் மற்றும் நிபோங் தெபால் ஐபிஎப் தொகுதிஉள்ளிட்ட வசதி குறைந்த 25 குடும்பங்களுக்குத் தினசரி தேவைக்கான உணவுப் பொருட்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பத்து காவன் ஐபிஎப் தொகுதி பொருளாளர் திரு.சந்திரசேகரன்,நிபோங் தெபால் ஐபிஎப் தொகுதி செயலாளர் திரு.மகேஸ்வரன் மற்றும் நிபோங் .தெபால் ஐபிஎப் தொகுதி உதவித் தலைவர் திரு. அமிர்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது கோரிக்கையை ஏற்று தன்னுடன் இணைத்து பொருள் உதவி வழங்கிய திரிகேஷ பூலோரிஸ்ட்ஸ் உரிமையாளர் திரு அ.சிவம் அவர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஐபிஎப் கட்சியின் தேசிய தகவல் பிரிவு தலைவருமான ச. குமரேசன் தெரிவித்துக் கொண்டார்.

191 total views, 1 views today