ஆர்.மணியம்
ஜொகூர் பாரு பிப் 8
ஜொகூர் அறவாரிய கழகம் மற்றும் ஜொகூர் கல்வி இலாகா இணைந்து நடத்திய ஒத்துழைப்பால் மாநிலத்தில் பி40 பிரிவை சேர்ந்த 1,600 ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.

இந்த வழி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் வெள்ளி நன்கொடையாக வசூலிக்கப்பட்டது.
ஜொகூர் அறவாரிய கழகத்தின் டியூஷன் திட்டத்தின் வழி வசதி குறைந்த மாணவர்களுக்கு டியூஷன் வழங்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 20 கணினிகள் வழங்கப்பட்டது.
இந்த கணினிகளை ஜொகூர் அறவாரிய கழகத்தின் தலைவர் ரோஷாய்னி முகமட் சானி சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களிடம் இன்று வழங்கினார்.
இந்த கணினிகள் வழங்கும் நிகழ்வில் மாநில கல்வி இலாகாவின் மாணவர்கள் வளர்ச்சி பிரிவின் துணை இயக்குனர் ஹாஜி ஓமார் சாலே மற்றும் ஜொகூர் அறவாரிய கழகத்தின் தலைமை நிர்வாகி நூர் ருசிலாவாத்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜொகூர் அறவாரிய கழகத்தின் டியூஷன் திட்டத்தில் இணையும் பி40 பிரிவை சேர்ந்த மாணவர்களை அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப பள்ளி நிர்வாகமே தேர்வு செய்ததாக அறவாரியத்தின் தலைவர் ரோஷாய்னி கூறினார்.
இதனிடையே இந்தத் திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
286 total views, 1 views today