English Tamil Malay

ஆர்.சுப்ரா

ஜொகூர் பாரு மார்ச் 30ஜொகூர் மாநில குருக்கள் சங்கத்தின் 5 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் சங்கத்தின் தலைவர் சிவகுரு தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தை ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கே.ரவீன் குமார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தற்போது இளைஞர்களுக்கு இடையே சமய அக்கறை குறைந்து வருவதால், சமய அறிவை வேரூன்றிச் செய்யக் குருமார்கள் உதவ வேண்டுமென தமது உரையில் ரவீன் குமார் கூறினார்.

இளைஞர்களுக்கு இடையே சமய அறிவு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஒருவரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சமய அறிவு மிக அவசியம் என்றார் அவர்.இதனிடையே இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு 10,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் யாயாசான் ரோகாயா அறவாரியத் தலைவர்  டத்தோ ஆர். சுகுமாரன் மற்றும் எஸ். அருள்தாஸ் கலந்து சிறப்பித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு அளித்த சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சிவகுரு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 102 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *