சிங்கப்பூர் டிச 30-ஆசியாவினன புகழ் பெற்ற சூசுக்கி கிண்ண கால்பந்துப் போட்டி நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.

தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த இரு ஆட்டத்தில் தாய்லாந்து இந்தோனேசியக் கால்பந்து அணியை 4-0 எனும் கோல் கணக்கில் வெற்றிக் கொண்டு கிண்ணத்தை கைபற்றியது.

இரு அணிகளுக்கு நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தை திரளான கால்பந்து இரசிகர்கள் சிங்கப்பூர் கால்பந்து அரங்கில் கண்டு களித்தனர்.
தாய்லாந்து கால்பந்து அணியின் கெப்படனான சொங்கரசின் முதல் பாதி ஆட்டத்தின் 2 ஆம் நிமிடத்திலும்,இரண்டாம் பகுதி ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் இரு கோல்களைப் புகுத்தி தாய்லாந்து கால்பந்து அணியினை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

இதனிடையே 63 வது நிமிடத்தில் சராச்சாட் மற்றும் பி.பலா 83 வது நிமிடத்தில் மேலும் இரு கோல்களை அடித்து தாய்லாந்து கால்பந்து அணியை சாம்பியன் பெறச் செய்த்துடன் ஆசிய வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற சூசுக்கி கிண்ணத்தில் வெற்றி வாகை சூடினர்.

மலேசியக் கால்பந்து அணி கால்பந்து அணியான ஹாரிமாவ் மலாயாவ கால் இறுதி சுற்றில் 4-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தோனேசியக் கால்பந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.
248 total views, 1 views today