கோலாலம்பூர் ஜூன் 30
தமது கடமைகளை மீறியதாக 10 கோம்பாக் வாக்காளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி மூத்த அமைச்சர் அஸ்மின் அலியின் மனுவை இங்குள்ள உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கு முழு விசாரணைக்கு வருவதற்கு முன்பாக சில விவகாரங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என அஸ்மினின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அக்தார் தாஹிர் தமது தீர்ப்பில் கூறினார்.
இந்த வழக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் 7 முதல் 10 ஆம் தேதி வரை விசாரணைக்கு வரும் என்றார் அவர்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் நிஜாமுடின் அஸ்மினை பிரதிநிதி தார்.
கோம்பாக் வாக்காளர்கள்க சார்பில் வழக்கறிஞர் சுரேந்திரா ஆனந்த் ஆஜரானார்.
தமது சொந்த அரசியல் லாபத்திற்காக செரத்தன் நகர்விற்கு பின்னணியாக இருந்து பிகேஆரிலிருந்து அஸ்மின் வெளியேறியதாக கோம்பாக்வாக்காளர்கள் தங்களின் அம்மனுவில் குறிப்பிட்டனர்.
277 total views, 1 views today