English Tamil Malay

புத்ரா ஜெயா ஜூலை 27-பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கம் திவால் நிலையில் சிக்கித் தவித்து வந்த 142,510 குடும்பங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 1924 ஆண்டில் உருவாக்கப்பட்ட திவால் இலாகாவின் 100 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த
‘ இரண்டாவது வாய்ப்பு கொள்கையை’ அறிவித்ததாக பிரதமர் இலாக்கா
(சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.

இந்த மைல்கல் கொள்கை மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றார் அவர்.
கோவிட் 19 தாக்கத்தால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார தாக்கம் அதிகமானோரை திவால் நிலைக்கு கொண்டு சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட்ட 142,510 பேர் 142,510 குடும்பங்களை பிரதிநிதி இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த அக்டோபர் 2023 -ல் இந்த கொள்கை அறிவிக்கப்பட்டது முதல் 8 மாதங்களில் 142,510 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இந்த 142,510 தனி நபர்கள் தங்களுடைய தவறுகளிலிருந்து இந்த வாய்ப்பை ஒரு பாடமாக கற்றுக்கொண்டு தங்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள இந்த இரண்டாவது வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த கொள்கை மடானி அரசாங்கத்தின் முதலாவது சீர்திருத்த சட்டம் அல்ல.
கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் 2023 ஆம் ஆண்டு கட்டாய மரண சட்டத்தை அகற்ற அனுமதி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் வழி 1,020 வழக்குகள் மறு ஆய்வு செய்ய கூட்ட அரசு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டதாக குலா தெரிவித்தார்.

 59 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *