English Tamil Malay

கோலாலம்பூர் அக் 25
இவ்வாண்டில் இதுவரை சுங்கை பூலோ தொகுதி மக்களுக்கு 37 மேம்பாட்டு திட்டங்கள் மேம்பாட்டுள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
மக்கள் மகிழ்ச்சி திட்டத்தின் ஒதுக்கீட்டின் வழி இந்த மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நேற்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

பொது வசதியை மேம்படுத்த 6 திட்டங்களும், பள்ளி வாசல் மற்றும் சூராவ்களை மேம்படுத்த 8 திட்டங்களும் இவற்றில் அடங்கும் என பிகேஆர் தகவல் பிரிவு துணை பொதுச் செயலாளருமான அவர் சொன்னார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு தளங்களை மேம்படுத்த 4 திட்டங்களும், தேசிய பள்ளிகளின் வளர்ச்சிக்கு 12 திட்டங்களும், இடைநிலை மற்றும் தாய்மொழி பள்ளிகளின் வளர்ச்சிக்கு 5 திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

மக்கள் மகிழ்ச்சி திட்டத்திற்காக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா வெ 20 லட்சம் லட்சம் ஒதுக்கீடு செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் நன்றி கூறுவதாக அவர் சொன்னார்.
இந்த ஒதுக்கீட்டை தமது நாடாளுமன்ற அலுவலகம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக முறையாக பயன்படுத்தியதாக ரமணன் குறிப்பிட்டார்.

 88 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *