English Tamil Malay

பட்டர்வொர்த் மார்ச் 9-
பட்டர்வொர்த் பிரபல 53 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ சிவ கங்காதரன் ஆலயத்தின் அடிகல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலய தலைவர் ப.சிவகுமார் அவர்களின் தலைமையில் ஆகம முறைபடி ஆலய அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

1970 ஆம் ஆண்டு ஸ்ரீ சிவ கங்காதரன் ஆலயம் பட்டர்வொர்த்,ஜாலான் மெங்குவாங்கில் அமைந்திருந்து.
ஆலயம் அமைந்திருந்த இடத்தில் மேம்பாடு கண்டதால்,இந்த ஆலயம் இந்து அறப்பணி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில்  2015 ஆண்டு முதல் வைக்கப்பட்டிருந்தது என ஆலய தலைவர் ப.சிவகுமார் கூறினார்.

பிறை ஆற்றுக்கு ஓரமாக பினாங்கு மாநில அரசாங்கம் இரு ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்ததாகவும்,மற்றொரு ஒரு ஏக்கரில் கருமை கிரிகை செய்யும் காரியங்களுக்கும் மற்ற ஒரு ஏக்கர் நிலத்தில் ரிம 50.5 லச்சம் செலவில் ஆலயம் நிர்மாணிக்கப்படும் என ப.சிவகுமார் விவரித்தார்.

2015 தொடக்கம்  ஸ்ரீ  சிவ கங்காதரன் ஆலய தலைவராக ப.சிவகுமார் பொறுப்பில் இருந்ததாகவும்,2008 பினாங்கில் ஏற்பட்ட ஆச்சி மாற்றத்தினால் மக்கள் கூட்டணி அரசு மூலமாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி மூலமாக 2 ஏக்கர் நிலம் ஆலயத்துக்கு ஒதுக்கப்பட்டது என ப.சிவகுமார் குறிப்பிட்டார்.

ஆலய நிர்வாகத்திடம் சேமிப்பில் உள்ள 1 மில்லியன் வெள்ளி மூலமாக ஆலய கட்டட நிர்மாணிப்பு பணிகள் தொடங்கப்படும் எனக் கூறிய ப.சிவகுமார் பொது மக்கள்,நல்ல உள்ளம் கொண்ட தொழில் அதிபர்கள்,நன்கொடையாளர்களின் மூலமாக ஆலய திருப்பணி சிறப்பாக நடைபெறுமென நம்பிக்கை கொண்டுள்ளதாக ப.சிவகுமார் தெரிவித்தார்.

இதனுடன் ஸ்ரீ சிவ கங்காதரன் ஆலயத்துக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்த மாநில முதலமைச்சர் செள குவான் இயோவ்,அதிக ஒத்துழைப்பு வழங்கிய பேராசிரியர் ப.இராமசாமிக்கு ஆலயத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட ஆலய தலைவர் ப.சிவகுமார் தெரிவித்தார்.

சிவ ஆலயம் எழுவது இப்பகுதியில் உள்ள மக்களுக்குப் பல நன்மைகளை கொண்டாடு வரும் என்பதில் ஐயமில்லை,ஆகவே நல்ல உள்ளம் கொண்ட இந்தியத் தொழில் அதிபர்கள்,நன்கொடையாளர்கள் தங்களின் வற்றாத ஆதரவையும் நன்கொடைகளை வழங்கி ஸ்ரீ சிவ கங்காதரன் ஆலயம் சிறப்பாக எழுதப்பட்டது மக்களுக்கு இந்து தர்ம சிந்தனை, ஆன்மிகப் பணி சிறப்பாக அமைய ஆதரவு கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆலய திருப்பணி பற்றி  மேல் விபரங்களுக்கு ஸ்ரீசிவ கங்காதரன் ஆலய தலைவர் ப.சிவகுமார் அவர்களை 018-666 5289 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெறலாம்..

 172 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *