கோத்தா கினபாலு ஜூலை 2
தாம் ஒரு தேசிய முன்னணி பிரதமர் என்பதால் தமக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் அந்த கூட்டணியை பலவீனப்படுத்தும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நினைவுறுத்தினார்.
இந்த நிலையில் தாம் தலைமையேற்றுள்ள அரசாங்கத்தின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும், தேமு நிர்வாகத்தை தாக்குவதற்கு சமமாகும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இரவு இன்று சபா தேசிய முன்னணி விருந்து நிகழ்ச்சியில் அம்னோ உதவி தலைவருமான அவர் உரையாற்றினார்.
இன்று நடைபெறும் சபா தேசிய முன்னணி மாநாட்டில் தாம் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதால், இன்று இரவு ஐந்து நிமிடம் மட்டுமே உரையாற்ற தாம் முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
‘நம்மை பிளவுபடுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என்பதை இன்று இரவு நடந்துள்ள சம்பவங்கள் காட்டுகின்றன’ என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் அம்னோ தலைவர் ஜாஹிட் அமிடி, துணைத் தலைவர் முகமட் ஹசான்,சபா அம்னோ தலைவர் புங் முக்தார் ராயின் மற்றும் பிபிஆர்எஸ் தலைவர் ஆர்தர் ஜோசப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
193 total views, 1 views today