டாக்கா ஜூன் 3
நாட்டிற்குள் வங்காளதேச தொழிலாளர்களை தருவிக்க எத்தனை வங்காளதேச ஏஜெண்டுகளை நியமனம் செய்வது என்பது குறித்து அமைச்சரவையே முடிவு செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
இந்த தொழிலாளர்களை தருவிக்க ஏஜென்டுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், எத்தனை ஏஜெண்டுகளை நியமனம் செய்வது என்பது குறித்து தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் நாடே முடிவு செய்யும் என்றார் அவர்.
இன்று டாக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமூகநல அமைச்சர் இம்ரான் அமாட்டுடன் நடத்திய சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வங்காளதேச தொழிலாளர்களை அமர்த்த 25 முகவர் நிறுவனங்களை மட்டுமே மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து வங்காளதேச ஏஜென்டுகள் சரவணனின் வருகையை முன்னிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இருப்பினும் எத்தனை ஏஜெண்டுகளை நியமனம் செய்வது என்பது குறித்து மலேசிய அமைச்சரவை மட்டுமே முடிவு செய்யும் என சரவணன் தெளிவுபடுத்தினார்.
இந்த விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவிற்கு மட்டுமே தாம் கட்டுப்பட போவதாக சரவணன் தெளிவுபடுத்தினார்.
198 total views, 1 views today