English Tamil Malay

கோலாலம்பூர், ஏப்.25-
கோலாலம்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் இந்திய கலாச்சார மையத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 16 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பி. என் ரெட்டி தலைமையேற்றார்.
அதோடு, இந்நிகழ்ச்சியில் மலேசியாவிலுள்ள

இந்தியக் கலாசார உலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், இந்திய சமூக சங்கங்கள், சமூக-கலாச்சார அமைப்புகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

120க்கும் மேற்பட்ட விருந்தினர்களில், சூத்ரா அறக்கட்டளையின் நிறுவனர் டத்தோ ராம்லி இப்ராஹிம், வத்சலா சிவதாஸ், ராதா ஷெட்டி, தவ மலர், நுண்கலைகளின் நிறுவன இயக்குநர்கள் திருமதி வினோஸ்ரீ சங்கர், பத்ம நிருத்தியாலயா கலையின் கலை இயக்குநர் சாமுவேல் ஜே. தாஸ், சிதார் மேஸ்ட்ரோ, பிரபாகரன் நாயர், மலேசியா-இந்திய ஹெரிடேஜ் அமைப்பின் நிறுவனர் தலைவர், குணசேகரன் ஸ்ரீரங்கன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் உலகளாவிய அமைப்பின் தலைவரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

2023- 2024 காலகட்டத்தில் இந்தியக் கலாச்சாரத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை இந்திய ஆணையத்தின் உயர் ஆணையரும் செயல் இயக்குநருமான சுபாஷினி நாராயணன் பகிர்ந்து கொண்டார்.
மேலும், பல ஆண்டுகளாக இந்தியா-மலேசியா மட்டுமல்லாமல் பிற உலகிறகும் இடையே உள்ள கலாச்சார புரிதலை உருவாக்கும் ஐ.சி.சி.ஆர்.யின் பயணத்தை பி. என் ரெட்டி விவரித்தார்.

நிகழ்ச்சியில் கர்நாடக குரலாசிரியர் ஸ்ரீகுமார் ராமகிருஷ்ணரின் இசை நிகழ்ச்சியும் டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் மாணவர்களால பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி போன்ற பல்வேறு இந்திய பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றன.
இந்திய கலாச்சார உறவுக்கான மன்றத்தின் முன்னாள் மாணவர்களும், பேராசிரியர் டாக்டர் கிருஷ்ண கோபால் ராம்பால், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் தொழில் மருத்துவப் பேராசிரியர் கலாஸ்ரீ ஜே. அஸ்வினி தேவேந்திரன், தன்யா ஸ்ரீ சசிகுமார் ஆகியோர் இணைந்து சிறிய கலந்துரையாடலையும் நிகழ்த்தினர்.

இந்தியாவிற்கு இடையேயான கலாச்சார உறவுகளின் புரிதலை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தால் ஏப்ரல் 9, 1950இல் இந்திய கலாச்சார மையம் நிறுவப்பட்டது.

அவ்வகையில், கோலாலம்பூரில், இந்திய கலாச்சார மையம் 10 பிப்ரவரி 2010 அன்று திறக்கப்பட்டதுடன் 2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு வருகை புரிந்த போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் என மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 15 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *