English Tamil Malay

(சத்யா பிரான்சிஸ்)

பினாங்கு ஜனவரி 26-மலேசியா நாட்டில் மிகவும் பிரபலமாக தண்ணீர் மலை முருகன் கோயிலில் கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கு ,நேற்று காலை ஜோர்ஜ் டவுனில் இருந்து புறப்பட்ட வெள்ளி ரதமும் தங்க ரதமும் பவனி வந்த சாலை நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

ஏராளமான பக்தர்கள் வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கானத் தேங்காய்களை காணிக்கையாக உடைத்தனர்.

தண்ணீர் மலை முருகப்பெருமான் கோயிலை சென்றடையும் சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு அதிசயமான காட்சியும் கண்ணில் பட்டது.

“சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, முருகப்பெருமான் திருக்கோயிலை நோக்கி செல்லும் மூன்று கிலோமீட்டர் சாலைகளில் எந்த குப்பையும் காணப்படாமல் பளிச்சென்று இருந்தது. இதற்கு நடமாடும் குப்பைத் தொட்டிகளும் முக்கியக் காரணமாக இருந்ததைக் காண முடிந்தது.

நகராண்மைக் கழக ஊழியர்களோடு தன்னார்வ தொண்டர்களும் சாலையில் கைவிடப்பட்ட பொருட்களை உடனே கூட்டி அள்ளி நடமாடும் குப்பை தொட்டியில் போட்டனர். பின்னர் குப்பைத் தொட்டியை தள்ளிக் கொண்டு குப்பையைத் தேடி வழி நடந்தனர்.

 74 total views,  2 views today

One thought on “நடமாடும் குப்பைத்தொட்டி”
  1. ஐயா தசரதரே…,
    வெள்ளி ரதமும் தங்க ரதமும் அல்ல. தங்க ரதமும் வெள்ளி ரதமும். தங்கதுக்குதான் முதலிடம்.
    செ*டி பையல்களை ஓரம்கட்டுங்கள். அவர்களுக்கு வழியைப் போய் தேவை இல்லாமல் முன்னுரிமை கொடுக்கவேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *