அகல்யா
கப்பாள பத்தாஸ், மார்ச் 28 –
மஇகா கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் திரு.ஏ.கே.முனியாண்டி தலைமையில் 150 வெள்ளி பெறுமானம் உள்ள பள்ளி சீறுடைகளுக்கான பற்று சீட்டுகள் மாணவர்ககுக்கு வழங்கப்பட்டது.
மஇகா கப்பாள பத்தாஸ் தொகுதி, கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற சேவை மன்றத்தின் ஒத்துழைப்போடு சுற்று வட்டார பள்ளிகளை சேர்ந்த 75 மாணவர்களுக்கு 150 வெள்ளிக்கான பற்று சீட்டை ஏ.கே முனியாண்டி, அம்னோ தலைவர்கள்,மை பிபிபி கட்சி தலைவர்கள் என்று சுமார் 100 பேர்கள் கலந்துகொண்ட மக்களின் மத்தியில் எடுத்து வழங்கினர்.
இந்த அண்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நேரடியாக கடைக்கு சென்று பள்ளி சீறுடைகள்,புத்தக பை, சப்பாத்து போன்றவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று ஏ.கே.முனியாண்டி கூறினார். கப்பளா பத்தாசை பொறுத்தவரையில் தேசிய முன்னணி வலுவாக இருக்கிறது என்பதால், இந்தியர்கள் முழுமையான ஆதரவை தேசிய முன்னணிக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த கோவிட்-19 காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகள் கல்வியின் நிலைப்பாடு மந்த நிலையில் காணப்பட்டதால், இந்த ஆண்டு நாம் கல்வியின் கற்றல் கற்பித்தலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
கூடிய விரையில் கப்பளா பத்தாஸ், கம்போங் கோயில் பொது மண்டபத்தில் தையல் வகுப்பு தொடங்கவிருக்கிறோம், எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசால் மரைக்கான் சார்பாக அஃபீப் ஒஸ்மாப் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
மைபிபிபி சார்பாக ஆசிரியர் வே.ஜனார்த்தன், மஇகா பினாங்கு மாநிலம் சார்பாக பொருளாளர் ஃபிரான்சிஸ், கப்பளா பத்தாஸ் சோமசுந்தரம் கலந்துக்கொண்டார்கள்.
383 total views, 1 views today
ம.இ.கா கப்பாள பத்தாஸ் தொகுதி தலைவர் திரு. ஏ.கே முனியாண்டி அவர்களது அரிய முயற்சியின் காரணமாக 75 பள்ளி இந்திய மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகபை மற்றும் காலணி வழங்கி உதவினார்.
தன்னலம் கருதாது சமுக உணர்வுடன் தனது கடமையை ஆற்றிடும் அன்னாருக்கு பினாங்கு தமிழவேள் கோ சாரங்கபாணி மன்றம் சார்பாக எனது பாராட்டுக்கள்.
நன்றி