English Tamil Malay

ஆளுநர் துன் டத்தோஶ்ரீ உத்தாமா அஹ்மட் ஃபூசி பங்கேற்றார்.

அகல்யா
ஆயிர் ஈத்தாம், ஏப்.18 –
பினாங்கு மாநிலத்தின் அமைந்துள்ள பிரபல குடியிருப்பான கம்போங் மலாயுவில் நோன்புப் பெருநாள்
திறந்த இல்ல உபசரிப்பு மகிழ்ச்சியாகவும் கோலாகலமாக நடைபெற்றது.
 

தொடர்ந்து 3 நாள் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் கம்போங் மலாயு சுற்று வட்டார
குடியிருப்பாளர்கள் 50,000 பேர்கள் உபசரிப்பில் கலந்துகொண்டார்கள். 10 ஆயிரம் பேர்களுக்குப்
பெருநாள் வாழ்ந்து ரொக்கப் பணமும் வழங்கப்பட்டதுடன் பல்வேறான சுவாரியசங்கள் நிறைந்த
நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

இந்த நிகழ்ச்சியின் பிரமாண்ட ஏற்பாட்டுக்கு தலைவரில் ஒருவரான பினாங்கு ஹிஜ்ரா அமைப்பின்
தலைவர் டத்தோஸ்ரீ சலீம் அப்துல் ரஹ்மான் கூறுகையில், கம்பன் மலாயுவில் நீண்ட பாரம்பரியம்
கொண்ட மக்கள் வசிக்கிறார்கள், அதே வேளையில் நாடு முழுவதும் இருந்து தங்களின் சொந்த ஊரான
பினாங்கு ஆயிர் ஈத்தாம், கம்போங் மலாயிற்குப் பெருநாள் கொண்டாட வருகை அளித்த மண்ணின்
மைந்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மூன்று நாள்
கொண்டாட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

இந்த மாபெரும் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
கொண்டாட்டம் குலோபல் மெஸ்ரா அறக்கட்டளை நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில் ஏற்பாடு
செய்யப்பட்டதாக விவரித்தார். இந்த மகிழ்ச்சிகளுமான கம்போங் மலாயு பெருநாள் கொண்டாட்டம்
அனைத்து இனத்தவரின் கண்ணையும் கருத்தையும் ஈர்த்துள்ளது என்பதுடன் கடந்த 1998 ஆம் ஆண்டும்
முதல் இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.

ஒரு சிறிய
விழாவாகத் தொடங்கப்பட்ட இந்த விழா இன்று மக்கள் பார்த்துப் பிரமிக்கும் அளவிற்கு நடைபெறுவது
எங்களிடம் இருந்து வரவில்லை அது ஆண்டவனின் சித்தம் என்று டத்தோ சலீம் அப்துல் ரஹ்மான்
கூறினார். கடந்த காலத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 2 ஆயிரம் பேர்கள் மட்டுமே
கலந்துகொண்டார்கள் ஆனால் இன்று 50 ஆயிரம் மக்கள் கலந்துக்கொண்டது இந்த மாநிலத்திற்குப்
பெருமை என்று அவர் கூறினார்.
 
இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் ஆடை அணிகலன் போட்டி, பி. ராம்லீ பாடல் போட்டி,
கரோக்கே நிகழ்ச்சி மற்றும் புரோட்டான் சாகா கார் 1, மோட்டார் சைக்கிள்கள் 3, குளிர் சாதனப்
பெட்டி மூன்று தொலைக்காட்சி 3 என்றும் மேலும் சிறப்புப் பரிசுகளை வழங்கும் அதிர்ஷ்ட குலுக்கல்
உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் கம்போங் மலாயுவில் வசிப்பவர்கள் 25
பேர்களுக்கு உம்ரா பேக்கேஜ்களின் சிறப்புப் பரிசுகளின் வழங்கப்பட்டன.

இது எங்கள் அனைவரின்
பாராட்டு மற்றும் நன்றியின் அடையாளமாக வழங்கப்பட்டது, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த
ஆண்டு நடைபெற்ற கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்
அடைகிறேன், மக்கள் நட்புடன் கூடிய விருந்து, ஏழைகளுக்கான கருணை கூடை வழங்கல்
ஆகியவையும் உற்சாகத்துடன் நடைபெற்றன சலீம் அல்லது மாமு சலீம் என்று அன்புடன்
அழைக்கப்படும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கம்போங் மலாயு திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு
மாநில ஆளுநர் துன் டத்தோஶ்ரீ உத்தாமா அஹ்மாட் ஃபுசி அப்துல் ரசாக், பினாங்கின் முன்னாள்
முதல்வர் லிம் குவான் எங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பயா தெர்போங்
சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங் சூன் சியாங் மற்றும் சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் லிம்
ஸ்வீ கிம் பங்கேற்றனர்,அதே வேளையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்கள்
மூன்று இனத்தையும் சேர்ந்த பொது மக்கள் இந்த வரலாற்றுப் பூர்வ பெருநாள் உபசரிப்பில்
பங்கேற்றனர்.

 19 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *