English Tamil Malay

கோப்பிசான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் துர்கை அம்மன் வழிபாட்டு,கராச்சார் ஆலயமாக திகழும்.தர்மமூர்த்தி இராமன்

கோப்பிங் செப் 8-ஈயைக் குட்டையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வழிப்பாடு செய்த மைனிங் ஸ்ரீ ஜெய முனிஸ்வர்ர துர்க்கை ஆலயம் சரித்திரம் வாய்ந்நது. இந்த ஆலயத்தில் கூடிய விரைவில் தேவாரம், பஜனை, பரதம் உட்பட வகுப்புகள் தொடங்கவுள்ளது என ஆலயத் தலைவர், தர்மமூர்த்தி இராமன் தெரிவித்தார்.

இந்த ஆலயம் புதிய இடத்தில் கட்டி 6 வருடமாகி உள்ளது. மக்களின் ஆதரவினால் ஆலயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேவாரம் உட்பட கலை கலாச்சார வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் போதிக்கவுள்ளோம் என ஸ்ரீ ஜெய முனிஸ்வரர் துர்க்கை அம்மன ஆலயத்தின் திருவிழாவில் அவர் கூறினார்.

ஆலயத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால். உணவு மண்டபம் இல்லாத்தால் கொஞ்சம் சிரமமாக உள்ளது. அதற்காக நாங்கள் நிதி திரட்டி வருகிறோம். எங்கள் ஆலய உணவு மண்டபத்திற்கு நிதி வழங்குபவர்கள் 016-5336857 (தர்மமூர்த்தி) அல்லது 0165085143 மோகன் என்பவர்களை தொடர்புக் கொள்ளலாம் என்றார்.

இந்த ஆலயத்தின் திருவிழாவில் சக்திகரகம், பால் குடமி, தேர் , அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. 

சுமார் 3000 பேருக்கு திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 131 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *