குரோ,மே 31-கெடா,பாலிங் எம்எஸ்ஆர்எம் மாரா இடைநிலைப் பள்ளி மாணவன் கார்த்திக் ராஜ் த/பெ சந்திரன் எஸ்.பி.எம் தேர்வில் 9 ஏ பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கெடா,குரோ தமிழ்ப்பள்ளி மாணவரான கார்த்திக் ராஜ் சந்திரன் சிறந்த தேர்ச்சிபெற்ற முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கார்த்திக் ராஜ் சந்திரனுக்கு அவர்களின் பெற்றோர்களான சந்திரன் இராமையா,தவமலர் சிதம்பரம் தங்களின் வாழ்த்துகளை தமது மகனுக்குத் தெரிவித்துக்கொண்டனர்.
எஸ்பிஎம் தேர்வில் எல்லா பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்று குரோ தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்த கார்த்திக் சந்திரனுக்கு குரோ,பெங்காலான் ஊலு மஇகா கம்போங் பாடாங் தாமாட் கிளையின் தலைவரும்,குரோ தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரிய குழுவின் தலைவரான கணேசன் கிருஷ்ணன் அம்மாணவருக்குச் சிறப்புச் சன்மானமாக ரிம200 வழங்கினார்.
தாம் ஒரு மருத்துவராக வர வேண்டும் என இல ச்சியம் கொண்டுள்ளதாகக் கூறிய கார்த்திக் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற உதவிய தமது பெற்றோர்கள்,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக பள்ளி தோழர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
59 total views, 1 views today