தஞ்தஞ்சாவூர் ஜூன் 1- அலை ஒளி செய்தி ஊடகம் மக்களுக்கான மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின்
உயாங் மலை சிறுவர் மர்ம நாவல் அறிமுகம்

தஞ்சாவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் ஏற்பாட்டில் 30/05/2024 மதியம் 12.00 மணிக்குப் பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் கே பாலமுருகன் கைவண்ணத்தில் மலர்ந்த உயாங் மலை எனும் சிறுவர் நாவல் அறிமுகம் கண்டது.

ஏடகம் நிறுவனர் முனைவர் மணிமாறன் தலைமையேற்று நாவலை வெளியிட உதவி தலைமையாசிரியர் திரு.இரா.பாவாணன் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.
அரசர் மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர், முனைவர் பழ.பிரகதீசு அவர்கள், கே.பாலமுருகன் அவர்களை அறிமுகம் செய்தும்,அவரது இலக்கிய சாதனைகளைப் பாராட்டியும் பேசினார். இவ்விழா தொடர்பான ஏற்பாடுகளையும் செய்தார்.

திரு.குமார் முதுகலைத் தமிழாசிரியர், வலிவலம் அவர்கள் எழுத்தாளர் பாலமுருகனின் மற்ற சிறுகதைகள் பற்றியும் விரிவாகப் பேசினார். குறிப்பாக 11ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் அரசுப் பாடநூலில் உள்ள பாலமுருகனின் பேபி குட்டி சிறுகதையைப் விவரித்துப் பேசினார்.
பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கே.பாலமுருகன் அவர்கள் உரையாற்றும்போது தமக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள இலக்கிய உறவைப் பற்றியும் உயாங் சிறுவர் நாவல் உருவான கதையையும் பகிர்ந்து கொண்டார்.
மலேசியாவில் கேமரன் மலை பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் சிக்கல்களையும் சவால்களையும் தொன்மங்களையும் ஒன்றிணைத்துச் சிறார்கள் விரும்பும் வகையில் படைத்திருப்பதாகத் தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
67 total views, 1 views today