செபராங் ஜெயா, மே.25 -சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனை அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் சம்ரி லாத்திஃப் காலமானார்.
தேசியக் கூட்டணியை( பி.என்) கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2022 ஆண்டு நடந்த பினாங்கு 15வது சட்டமன்றத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினரை 1563 வாக்கு பெரும்பான்மையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் நோர் இடாயா செக் ரோஸ் என்பவரைத் தோற்கடித்தார். இவர் பெறது 15,433 வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் மரணம் தொடராக கருத்துரைத்த பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கவலை தெரிவித்ததுடன் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தார்.
சட்டமன்ற தேர்தல் நடந்து ஓராண்டு 6 மாதத்தில் காலமான சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் சம்ரியின் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடக்கும் பட்சத்தில் இதுவொரு கடுமையான தேர்தலாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
58 total views, 1 views today