பாயான் பாரு மே24-பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பின் 15வது பொதுக் கூட்டம் பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பின் 15வது பொது கூட்டம்,பினாங்கு,பாயான் பாருவில் உள்ள அமாரி தங்கும் விடுதியில் சிறப்பா நடைபெற்றது.

பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பு (PENSEC) 2001 இல் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது, பல்வேறு வணிக நிறுவனங்களில் உள்ள அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே தொழில்முறையை மேம்படுத்தும் ஒரே நோக்கத்துடன்.

20 பேர் கொண்ட தோற்றுவார்களுடன் ஆரம்பிக்கப்பட்டது என அதன் தலைவர் முகமட் சாஃபிக் முரளி அப்துல்லா தெரிவித்தார். பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பு நிறுவப்பட்ட பிறகு,இந்த அமைப்பில் 150 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.
பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பு ஆனது 2002 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறது என்பதுடன் கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு முத்தியார தீவிலிருந்து பல்வேறு உற்பத்தி சேவை நிறுவனங்ளுக்கு சேவைகளை வழங்குவதுடன் இதில் 2500 பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது என முகமட் சாஃபிக் மேலும் தெரிவித்தார்.

இதனுடன் பினாங்கு திறன் பயிற்சி மையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பயிற்சிகளில் “பாதுகாப்பு நடைமுறைகளில் அடிப்படைகள்”, “திறமையான பாதுகாப்பு நடைமுறைகளில் தேர்ச்சி பெறுதல்” மற்றும் “தொழில்துறை விசாரணை நுட்பங்கள்” ஆகியவை அடங்கும் என்றார் அவர்.
இந்த பயிற்சிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடையே தொழில்முறையை அதிகரிக்க பல்வேறு உற்பத்தி மற்றும் தளவாட நிறுவனங்களிடமிருந்து பெரும் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் பல்வேறு CSR திட்டங்களை PENSEC அமைப்பு மேற்கொண்டுள்ளது.

PENSEC ஆனது UNIMAP, PSDC, SWISS மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து, பாதுகாப்பு அதிகாரிகளிடையே நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில், பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பு எப்போதும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருங்கிய உறவுகளையும் பராமரித்து வருகிறது. இறுதியாக, PENSEC ஆனது விநியோகம் சங்கிலி தொடர் மற்றும் விநியோக தயாரிப்புகளை நிர்வகிப்பதற்கான நிறுவனங்களுக்கு பல்வேறு ஆய்வு வருகைகளை ஏற்பாடு செய்துள்ளது எனத் முகமட் சாஃபிக் விவரித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பினாங்கு பாதுகாப்பு பயிற்சியாளர்கள் அமைப்பின் தோற்றுனர் கிருஷ்ணன் மணியம் மற்றும் உடன் பினாங்கு காவல் துறையின் சிறார் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ராபர்ட் போஸ்ட் நிறுவனத்தின்ன நிறுவனத்தின் நவீன முறையில்பா துகாப்பு பற்றிய விளக்க உரையும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
113 total views, 1 views today