English Tamil Malay
Spread the love

அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோதலில் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு இடையே, தோதல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னரே தபால் மூலமும் நேரடியாகவும் சுமாா் 10 கோடி போ வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு வாக்குச் சாவடிகளில் வாக்களாா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும்.

இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, ஜோ பிடன் 129 வாக்குகளும், டிரம்ப் 94 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *