அகல்யா
கோலாலம்பூர்,நவ 19 அடுத்த ஆண்டு அக்கோபர் மாதம் தொடக்கம் மளிகைக்கடையின் மது விற்பனைக்குத் தடை விதிப்பது இறுதியான முடிவு என கோலாலம்பூர் மாநகர் மன்றமத்தின் முடிவு இறுதியானது என கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவர் மூசா இன்று தமது டிவிட்டரில் இதனை கூறினார்.
மளிகைக்கடை,சீன மருந்தகங்கள் மற்றும் சில்லரைக்கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்குக் இனி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்திருந்தது.நவம்பர் 15ஆம் தேதி தொடக்கம் அமலுக்கு வந்த மதுபான லைசென்ஸ் வழிகாட்டியின் கிழ் இனி கோலாலம்பூரில் உள்ள மளிகைக்கடைகள் 24 மணி நேரம் செயல்படும் சில்லரைக்கடைகள் உடன் சீன மருந்தகங்கள் போதையை உட்படுத்தக்கூடிய மதுபானங்கள் விற்பனைக்காக புதிய லைசென்ஸ் வினியோகிக்கப்படும்.
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிவரை மட்டுமே மதுபான விற்பனைக்காக லைசென்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கபடும் என்பதுடன்,உணவகங்கள்,கேளிக்கை மையங்கள்,தங்கும் விடுதிகள்,பேரங்கடிகள்,வனிக தளங்கள் மற்றும் மொத்த வர்த்தக தளங்கள் ஆகியவற்றில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படாது என கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.