இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில்:- ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு லண்டன் வந்தேன். அதுவும் எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன்.
எங்கள் குடும்பத்தில் எந்த விரிசலோ, பிரச்சினையோ இல்லை. எனக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த எனது பெற்றோருடன் எனக்கு ஏன் பிரச்சினை வரப்போகிறது? நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பம். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். தினமும் எனது குடும்பத்தினருடன் உரையாடுகிறேன். இதே போல் எனது பயிற்சியாளர் கோபிசந்துடனோ அல்லது அவரது அகாடமியில் உள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்துவதிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது.
டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் இந்தியா – இங்கிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் ஆமதாபாத்தில் நடைபெறும் – கங்குலி.