உலகளவில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரியஸ் இன்று வெளியாகவுள்ளது.
உலகம் முழுவதும் ஐபோன்-12 போன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல இந்தாண்டில் தனது ஐபோன்-12 சீரியஸை வெளியிடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த தினம் ஐபேட் மற்றும் சில சாதனைகளை அறிமுகம் செய்தது. இது, ஐபோன் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பதில் இம்மாதம் வெளியாகும் என தகவல் கிடைத்தது. அதன்படி ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன்-12 சீரியஸை இன்று (அக். 13) காலை 10:30-க்கு வெளியிடவுள்ளது.
“ஹை ஸ்பீட்” என்ற வாசகத்துடன் இந்த அறிமுக விழா இன்று நடக்கவுள்ள நிலையில், இதில் உலகின் வேகமான ஆப்பிளின் A14 சிப் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. மேலும், 2017 ஆம் வெளியான ஆப்பிளின் A11 bionic சிப், தற்பொழுது வரை தாறுமாறான பெர்பாமன்ஸை கொடுத்து, பெஞ்ச்மார்க்ஸ் வருகிறது.
இந்தநிலையில், A14 சிப் குறித்த எதிர்பார்ப்பு, ஐபோன் பிரியர்களிடையே அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போன் வெளியாவதற்கு முன்பே, இதுகுறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவியது. அதுமட்டுமென்றி, சில வலைத்தளத்தில் இதன் விலை குறித்த தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது.