இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் நிறுவனத்துடன் ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் தவணையாக கடந்த ஜூலை மாதம் ஐந்து விமானங்கள் இந்தியா வந்தது.
இந்நிலையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைய உள்ளன. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 3 விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரலில் 6 விமானங்களும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.