English Tamil Malay

“டத்தோ ஸ்ரீ் ஆர்.எஸ்.தனேந்திரன் புத்தாண்டு வாழ்த்து”

பட்டர்வொர்த் டிச 31
2022 ஆம் ஆண்டு நமது அனைவரின் லட்சியங்கள் மற்றும் கனவுகள் நிறைவேறும் ஆண்டு என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தமது வாழ்த்து செய்திகள் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளில் நாம் பல துன்பங்கள் மற்றும் இன்னல்களை எதிர்நோக்கி வந்துள்ளோம்.
கோவிட் 19 தாக்கம் மற்றும் வெள்ளப் பேரிடர் நமக்கு பல இன்னல்களை தந்து சென்றுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் பலரை நாம் இழந்துள்ளோம். அன்புக்குரியவர்களை நாம் இழந்துள்ளோம்


ஆனால் இந்தப் புத்தாண்டு நமக்கு ஒரு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவேண்டுமென நாம் பிரார்த்திப்போம்.

நாம் ஜெயிக்க பிறந்துள்ளோம் என்பதுடன் நிச்சயம் வெற்றி நம் கையில் என தமது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

 197 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *