English Tamil Malay

அலோஸ்டார் டிச 20-மிகச் சிறப்பான முறையில் வழி நடத்தப்பட்டு வரும் ஆலோஸ்டாரில் அமைந்துள்ள இராமலிங்க அடிகளாரின் ஆசிரமத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையிலிருந்து வருகிறது.


கடந்த கோவிட்19 தாக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டு.மீண்டும் புது பொழிவுடன் வரும் 2022 ஆண்டில் புதிய நிர்வாகத்துடன் செயலில் வரும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
இந்த ஆசிரமத்துக்குத் தனித்து விடப்பட்ட குழந்தைகள்.ஆதரவற்ற பிள்ளைகள்,வசதி குறைந்த குடும்ப பிள்ளைகளுடன் மாணவர்களைத் தத்தெடுத்து,அவர்களுக்கு வேண்டிய உணவு,தங்கும் வசதி,பள்ளிக்குச் சென்று வர வசதிகளும் இலவசமாக வழங்கி ஆசிரமத்தைப் பராமரித்து வர அனைத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க புதிய நிர்வாகம் முன் வந்துள்ளது.


இந்த சேவையைப் பெற விரும்பு பெற்றோர்கள்.தாங்களோ அல்லது மற்றவர்கள் மூலமாகச் சேர்க்க விரும்புபவர்கள் திரு K.நாகராஜன்0124805565 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


17/ஆம் தேதி நடந்த ராமலிங்க ஆசிரமத்தின்2021 முதல் 2023 வரைக்கான புதிய நிர்வாகத்தில் தலைவராக Dr எஸ்.தண்ணீர் மலை உதவி உபதலைவராகத் திரு D.சீனிவாசகம் கௌ.செயலாளர் திரு R.சுசி பாலன்உதவி செயலாளர் திரு பாலன் ராமநாதன் பொருளாளர் திரு க.நாகராஜன் செயலவைக்குழு திரு கேசவன் பிள்ளை Dr வெங்கட்திரு க.குணசேகரன் திரு கே.செல்வராஜுதிரு M.சுந்தரபாண்டி திருமதி சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


முகவரி :Ramalingam Asiramam.2032.Lorong Bunga 12Taman Bahagia FASA 3Jalan Inai.05050Alor Setar Darulaman.

 264 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *