English Tamil Malay

அகல்யா
ஜார்ஜ்டவுன், டிச 9 –
தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்தை வைத்து ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முஹமாட் சாடிக் அரசியல் விளையாடக் கூடாது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும், துணை முதலமைச்சருமான பேராசிரியர் இராமசாமி நினைவுறுத்தினார்.

கடந்த ஆண்டு கோவிட்-19 தாக்கம் அதிகம் இருந்த வேளையில் சில ஆலயங்களில் இரத ஊர்வலம் நடத்த அனுமதி அளித்த டத்தோ ஹலிமா, இந்த ஆண்டு மக்கள் அனைவரும் இரண்டு முதல் மூன்று தடுப்பூசி போட்டுவிட்டப் பிறகும் மேலும் கோவிட்-19 தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஏன் இரத ஊர்வலத்திற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

கடந்த 2 டிசம்பர் மெய்நிகர் கூட்டத்தில் ஒற்றுமைத் துறை அமைச்சின் செயலாளர் தைப்பூச திருவிழா இரத ஊர்வலம் உட்பட கொண்டாட்டத்திற்கான நிர்ணியக்கப்பட்ட நடைமுறையுடன் அனுமதி வழங்கிவிட்டப் பிறகு ஏன் இந்த திடீர் மாற்றம் ஏன் என்று பினாங்கு கொம்தாரில் பேராசிரியர் இராமசாமி தலைமையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன், மாண்புமிகு சத்திஸ் முனியாண்டி, பினாங்கு பாலதண்டாயுதபாணி ஆலயத்தலைவர் டத்தோ சுப்பரமணியன், குயின் வீதி மாரியம்மன் ஆலயத் தலைவர் சுந்தர மூர்த்தி, மேலும் வாரிய ஆணையர்கள் தனபாலன், திரு.காளியப்பன் மேலும் நில ஆய்வாளர் நா. விவேகானந்தன் மேலும் பலர் கலந்துக்கொண்ட செய்தியாளர் கூட்டத்தில் ஒருமித்த குரலாக கேள்வி எழுப்பினர்.

புதிய கோவிட்-19 ஒமிக்ரான் மறுபாட்டின் அச்சுறுத்தல் இருந்தபோதும் , ஜனவரி 18, 2022 அன்று வரும் தைப்பூசத் திருவிழாவில் தேர் ஊர்வலத்தை இரத்3து செய்வதற்கான அவசியம் ஏதும் இல்லை என்று பேராசிரியர் இராமசாமி கூறினார்.

அடுத்த ஆண்டு தைப்பூசத்தில் இரத ப்ஊர்வலம் நடக்குமா என்ற கேள்வி முதலில் எழுந்த்தது. அதனைத் தொடர்ந்து கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேச மான கோலாலம்பூர் போன்ற மாநிலங்களில் இந்து பிரதிநிதிகளுடன் கலந்தோசித்தப் பிறகு தைப்பூசத்தில் தேர் ஊர்வலத்தை நிறுத்த முடிவு செய்ததாக டத்தோ ஹலிமா கூறினார்.

இருப்பினும், இந்த மத நிகழ்ச்சியை நடந்த கடுமைய நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள்( SOP ) அமைக்கப்படும் எனக் பேராசிரியர் இராமசாமி கூறினார்.

 203 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *