English Tamil Malay

கோலாலம்பூர் டிச 6
முன்னாள் பண்பாட்டு, கலை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டான்ஸ்ரீ சபாருடின் சிக் கோவிட் 19 தொற்றின் காரணமாக மரணம் அடைந்தார்.

80 வயதுடைய சபாருடின் நேற்று இரவு 7.45 மணிக்கு மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் மரணமடைந்ததாக அவருடைய சிறப்பு உதவியாளர் ஜம்ரி முகமட் கூறினார்.

கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சபாருடின் கடந்த ஒரு வாரமாக மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அம்னோ பொதுச்செயலாளருமான சபாருடினின் மரணம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு தகவல் தரப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி தற்போது சரவா பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 1982 முதல் 1987 ஆம் ஆண்டு வரை மகாதீரின் அரசாங்கத்தில் துணை நிதி அமைச்சராக சபாருடின் பதவி வகித்துள்ளார்.

 28 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *