English Tamil Malay

கோலாலம்பூர் டிச 6
தமது தொகுதியில் அண்மையில் பள்ளிவாசல் நிகழ்ச்சி ஒன்றில் செலண்டாங் அணிந்து சென்றுள்ள பாக்காத்தான் ஹராப்பான் செகாம்புட் எம்பி ஹன்னா இயோ, கடமை உணர்வோடு செய்துள்ள ஒரு செயல் என பெங்கேராங் எம்பி அஸாலினா ஒத்மான் கூறினார்.

ஹன்னா இயோ தமது தொகுதிக்கு சேவையாற்றுவதோடு மட்டுமல்லாமல், பள்ளிவாசல் ஆசாரங்களை மதிக்கத் தெரிந்தவர் என்றார் அவர்.

பள்ளிவாசலுக்கு செலண்டாங் அணிந்து சென்ற செகாம்புட் எம்பியை குறை கூறிய முன்னாள் ஜொகூர் ஜசெக தலைவர் டாக்டர் பூ செங் ஹாவின் அறிக்கை குறித்து முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான அஸாலினா கருத்துரைத்தார்.

நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வெறுப்புதனமான இன மற்றும் மத அரசியல் நடத்தப்பட்டு வருவது குறித்து நாம் வெட்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஹன்னா இயோ ஒரு சிறந்த எம்பி மட்டுமல்லாமல், ஒரு விசுவாசமான அரசியல்வாதி என அவர் வர்ணித்தார்.
இதனிடைய இந்த விவகாரத்தில் தமக்கு ஆதரவாக பேசிய முன்னாள் மக்களவை சபாநாயகருக்கு ஹன்னா நன்றி கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதீக் சைட் அப்துல் ரஹ்மான், ஹன்னா ஒரு ஆற்றல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல், அனைத்து மதங்கள் மற்றும் இனத்தவர்களுக்கு மதிப்பவர் என குறிப்பிட்டார்.

மேலும் தமது தொகுதி மக்களுக்கு சிறந்த சேவைகளை ஹன்னா இயோ வழங்கி வருகிறார் என்றார் அவர்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *